Monday, April 2, 2018

42-கேள்வி


                      42- கேள்வி

411-செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
   செல்வத்து ளெல்லாம் தலை.

செவிவழியாகப் பெறும் செய்திகளே அறிவுப்பூர்வமான சிறந்த  செல்வமாகும்.இது தேவை.

412-செவிக்குண வில்லாத போழ்து சிறிது
   வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவி செய்திகளை கேட்கும் நிலையில்லாதபோது ,வயிறு உணவிற்காக  பசிக்க ஆரம்பிக்கும்.இது தேவை.

413-செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
   ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 

குறைந்த உணவருந்தும் சான்றோர்க்கு ஒப்பாவர்,செவி வழி கேள்வி ஞானம் உடையவர்.இது தேவை.

414-கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
   கொற்கத்தின் ஊற்றாந் துணை.

கற்றவரிடம் செய்திகளை கேட்டு தெரிந்து கொள்வதென்பது,நடை தளர்ந்தவனுக்கு பயன்படும் ஊன்று கோலைப் போன்றதாகும்.இது தேவை .

415-இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
   ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

ஒழுக்க முடையவரின் அறிவுரையானது,வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு உதவும் ஊன்று கோலைப் போன்றதாகும். இது தேவை.


416-எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
   ஆன்ற பெருமை தரும்.

நல்லவற்றை கேட்க கேட்க ஒருவரை ஆன்றோராக்கும்.இது தேவை.

417-பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லா ரிழைத்துணர்ந்
   தீண்டிய கேள்வி யவர்.

தவறான செய்திகளை கேட்டாலும் நன்கு நுணுகி ஆய்வறியும்  திறன் கொண்டவர்கள் அறிவற்ற முறையில் பேச மாட்டார்கள்.இது தேவை .

418-கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
   தோட்கப் படாத செவி.

நல்லோர் உரையை கேட்கமாட்டாத காதுகள் இருந்தும் அவை செவிட்டுக் காதுகளாகவே கருதப்படும்.இது தேவை.

419-நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
   வாயின ராத லரிது.

நுண்ணிய கேள்வியறிவில்லாதவர்கள் அடக்கமாகவும், அமைதியன குணம்  படைத்தவர்களாகவும் இருக்க இயலாது.இது தேவை.

420-செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
   அவியினும் வாழினு மென்.

சுவையான (இசை?) சொற்களை கேட்காமல்,வாயிக்கு சுவை தேடுவது  உயிருடன் இருக்கும் மிருகங்களுக்கு ஒப்பாவர்.இது தேவை .

‘கேள்வி’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை

No comments: