Sunday, April 29, 2018

96-குடிமை


                       96-குடிமை

951-இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
   செப்பமும் நாணும் ஒருங்கு.

உயர்குடி மக்கள் எனில் நடுநிலை தவறாமை,அடக்கம் ஆகிய குணங்களை கொண்டவர்கள்.இது தேவை.

952-ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
   இழுக்கார் குடிபிறந் தார்.

ஒழுக்கும்,வாய்மை,மற்றும் மானம் இம்மூன்றிலும் கவனமாக இருப்பவர்களே உயர்குடி மக்கள்.இது தேவை.

953-நகையீகை,இன்சொல் இகழாமை நான்கும்
   வகையென்ப வாய்மைக் குடிக்கு.

புன்னகை,வழங்கும் தன்மை,இனிய சொல்,பிறரை கோவம் கொள்ளாதிருத்தல் ஆகிய நான்கு குணங்களும் கொண்டவரை நல்ல குடிமக்கள் என வகைப்படுத்தலாம். இது தேவை.

954-அடுக்கிய கோடி பெறினும் குடிபிறந்தார்
      குன்றுவ செய்தல் இலர்.

பல கோடி பொருட்கள் கொடுத்தாலும் நல் குடி பிறந்தோர் கொடும் செயல்களுக்கு இடம் தர மாட்டார்கள்.இது தேவை.

 955-வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பின் தலைப்பிரிதல் இன்று.

வறுமை வந்தாலும் வழங்கும் தன்மை கொண்ட பழம் பெருமை கொண்டவர்கள் தங்கள் பண்பை மீறமாட்டார்கள்.இது தேவை
                                
956-சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
   குலம்பற்றி வாழ்துமென் பார்.

நற்குடிபிறந்தோர் வஞ்சனை எண்ணங்களோடு தகாத காரியங்களை செய்யமாட்டார்.இது தேவை.

957-குடிபிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
   மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர்குடி மக்கள் சிறு தவறு செய்திருந்தாலும் அது வானத்து நிலவில் தோன்றும் மாசுபோல் வெளிப்படையானது.இது தேவை.

958-நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
   குலத்தின்கண் ஐயப் படும்.

நல்ல குடும்பத்திலிருந்து வந்தவனிடம் அன்பு என ஒன்று இல்லை எனில் அவன் குலத்தையே சந்தேகிக்கும் படி ஆகிவிடும்.இது தேவை.

959-நிலத்திற் கிடந்தமை கால்கட்டும் காட்டும்
   குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

பயிர்களைப் பார்த்தாலே எந்த நிலத்திலிருந்து விளைந்தது என அறியலாம் ,அது போல ஒருவர் வாய்சொல்லில் அவர் எத்தகைய குடி பிறந்தவர் என அறியலாம்.இது தேவை.
                              
960-நலம்வேண்டின்நாணுடைமைவேண்டும்குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

நல்லது நடக்க வேண்டுமானால் நாணம் வேண்டும்,குல உயர்வு பெற வேண்டுமானால் பணிவு வேண்டும்.இது தேவை.

குடிமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
குடிமை அதிகாரம் உயர்குடி மக்கள் எத்தகையவர் என விவரிக்கிறது.
                    ********************************************
கீழ்குடி மக்கள்(கீழ் சாதி)இருப்பதால் தானே உயர்குடி மக்கள் என உணர்த்த முடியும்? மனிதர்களை வேறு படுத்திக்காட்ட இந்த புலவர்கள் பாடியாதால்  தானே ஐவகை வர்ணாசிரம் வளர்ந்தது. ?

சுய சிந்தனை யற்ற தமிழ் மன்னர்களாலே தானே சாதியம் வளர்ந்தது?.

எதை நினைத்து புலவர்கள் பாடுகின்றனரோ அந்த கருத்து மக்களிடையே சாகாவரம் பெற்று விடுகிறது.உண்மைதானே?
             **********************************************************


No comments: