Saturday, April 21, 2018

70-மன்னரை சேர்ந்து ஒழுகல்


                70-மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

691-அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
   இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

அகலாது, அணுகாது தீக்காயவேண்டும், அதுபோல மன்னரிடம் பழகுதல் வேண்டும்.இது தேவை.

692-மன்னர் விழைப விழையாமை மன்னரான்
   மன்னிய ஆக்கந் தரும்.

மன்னரோடு பழக விரும்புகின்றவர்கள்,மன்னர் விரும்புவதை விரும்பாமல் இருந்தாலே,மன்னரின் வாயிலாக அவர்களுக்கு நிலையான ஆக்கத்தை அளிக்கும்.இது தேவை.

693-போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
   தேற்றுதல் யார்க்கும் அரிது.

பொறுத்துக்கொள்ள முடியாத குற்றங்களை செய்தாலே மேலே உள்ளவர்களின் சந்தேகத்துக்கு இடமில்லாமல் வாழ்வது அரிது.இது தேவை .

694-செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
   ஆன்ற பெரியா ரகத்து.

ஆற்றலுள்ள பெரியோர் முன்னே,மற்றவர்கள் காதுக்குள்(ரகசியம்) பேசுவதையும் சிரிப்பதையும் தவிர்த்து அடக்கமாக இருத்தல் வேண்டும்.இது தேவை

695-எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்காற் கேட்க மறை.

பிறர் பேசும் மறைமுக பேச்சுக்களை ஒட்டுக்கேட்க கூடாது,அவர்களே அது பற்றி சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.இது தேவை.

696-குறிப்பறிந்து காலங்கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்.

ஒருவரிடம் பேசும் போது அவர் மன நிலை அறிந்து தக்க காலத்தை தேர்வு செய்து அவர் வெறுப்பதை தவிர்த்து, விரும்புவதை மட்டுமே பேச வேண்டும்.இது தேவை.

697-வேட்பன சொல்லி வினையில் எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.

மற்றவர்கள் கேட்கின்றனர் என்பதற்காக பயனற்றவைகளை கூறக்கூடாது. பயனுள்ள வார்த்தைகளையே பேசவேண்டும்.இது தேவை.

698-இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
   ஒளியோ டொழுகப் படும்.

ஆட்சி அதிகாரத்திலிருப் போரைப் பார்த்து,எனக்கு இவர் இளையவர்தான்,எனக்கு உறவும் கூட என இகழாமல் ,ஆட்சியரின் பெருமைக்கு ஏற்ப நடக்க வேண்டும்.இது தேவை.

699-கொளப்பட்டோம் என்றெண்ணிக்கொள்ளாதசெய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்.

மன்னரால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டோம் என்கிற துணிவில்,ஏற்றுக் கொள்ள முடியாத காரியங்களை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள்.இது தேவை.

700-பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
   கெழுதகைமை கேடு தரும்.

நெடுங்கால நட்பாச்சே என நினைத்து தகாத செயலை செய்ய உரிமை எடுத்துக்கொள்வது கேடாய் முடியும்.இது தேவை .
மன்னரை சேர்ந்து ஒழுகல்அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை 
                       *****************************************.
திருப்பதியில் உள்ள சிலையை ஒரே நாளில் வெங்கடாசலதியாக மாற்ற வில்லை,காளி சிலையை ஆணாக மாற்றும்போது அதை அவள் மகனான சுப்பரமணியராக வணங்குவது தான் முறை என்று சைவ பார்ப்பனர்கள் விரும்பினார்கள்!
ஆனால் ராமானுஜர்(11-ம் நூற்றாண்டு)திருப்பதியில் அவர் மாமா திருமலை நம்பியிடம் ராமாயண சொற்பொழிவை கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர்,மேலே திருமலையில் நடக்கும் சைவர்களின் பூஜையை கேள்வியுற்று சண்டைக்கே போனார்.சைவ-வைணவ போர் நடந்த காலம் அது.குருபரம்பரை நூலில் இது விவரிக்கப்படுகிறது.ராமானுஜரின் போர் குணத்தால் வைணவ ஸ்தலமாக திருமலை மாறியது,பார்ப்பனர்கள் பெண்தெய்வத்தை வணங்க கூடாது அதற்கு பதிலாக அங்கே இருந்த பெண் தெய்வத்தை கீழே திருச்சானூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  ஆனால் திருமலையில் உள்ள சிலை பெண்  சிலைதான்,என தானே நேரில் பார்த்த்தாக,தாத்தாச்சாரி கூறுகின்றார்.(ப.284)
                          **************************************
  

No comments: