Sunday, April 22, 2018

74- நாடு


                             74-நாடு

731-தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்விலாச்
   செல்வரும் சேர்வது நாடு.

விளைச்சல் குறையா நாடும் ,தக்க அறிஞர் பெருமக்களும்,செல்வத்தை தீய வழியில் செலவிடா மக்களும் கொண்டதே சிறந்த நாடு.இது தேவை.

732-பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.

பெரும் பொருள் வளம் கொண்டதாகவும் ,நல்ல விளைச்சல் கொண்டதாவும் அமைவதே சிறந்த நாடு.இது தேவை.

 733-பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையொருங்கு நேர்வது நாடு.

 போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பிற நாட்டு மக்களின் வருகையால் ஏற்படும் வரிச்சுமையை தாங்கி அரசருக்கு வரிசெலுத்தும் மக்கள் கொண்டதே சிறந்த நாடாகும்.இது தேவை.

734-உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
      சேரா தியல்வது நாடு.

மிகுந்த பசியும்,தீரா பிணியும் அழிவு ஏற்படுத்தும் பகையும் இல்லா நாடே சிறந்த நாடு.இது தேவை.

735-பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
      கொல்குறும்பும் இல்லாத நாடு.

பல குழுக்கள் இருந்தால் நாட்டை பாழ் செய்யும் உட் பகையும்,அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களும் இல்லததே சிறந்த நாடு.

736-கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.

கெடுதல் அறியாத நாடும்,கேடு வந்தாலும் அதை சீர் செய்யும் ஆற்றலும் கொண்ட வளம் கொண்ட நாடே சிறந்த நாடு.இது தேவை

737-இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

கடல் ஆறோடு  இணையும் மலையும்,மழைவந்தால் காக்கவல்ல அரண்களும் கொண்டதே சிறந்த நாடு.இது தேவை.

738-பிணியின்மை செல்வம் விளையின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டில் வைந்து.

நோயற்ற வாழ்வு,செல்வம், அதிக விளைச்சல்,இன்ப நிலை மற்றும் பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டுக்கு அழகு சேர்க்கும்.இது தேவை.

739-நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
   நாட வளந்தரு நாடு.

தொடர் முயற்சி கொண்டு வளம் பெறும் நாட்டை விட இயற்கையிலேயே வளம் கொண்ட நாடு சிறந்த நாடு.இது தேவை.
                         
740-ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.

நாட்டுக்கு சரியன வேந்தன் அமையவில்லையெனில் எல்லா வளம் இருந்தும் பயனில்லை.இது தேவை.

‘நாடு’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
                              **************************************
கடவுள் ஏன் கல்லானார்?

பஞ்சாபில் நடந்த ஜலந்தா்-பிருந்தா தம்பதியரின் கதை இதோ,
ஒரு நாள் தன் கணவர் ஜலந்தரை காணவில்லை என தன் இஷ்ட்ட தெய்வமான பகவான் கிருஷ்ணனை வேண்டுகிறாள்,பிருந்தா.அப்பொது இதை கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன்,கணவன் தான் இல்லையே, இந்நேரத்தில் இவளை புணர்ந்து இவளுக்கு சந்தோஷம் தந்தால் என்ன? என கணக்குப்போட்டு கணவன் உருவத்தில் பிருந்தாவை புணருகின்றான் கிருஷ்ணன்,

அந்நேரம் பார்த்து வெளியில் சென்ற கணவன் வந்துவிடவே சினங்கொண்ட பிருந்தா கிருஷ்ணனைப் பார்த்து, ‘நீ கல்லாக போவாய்சாபம் இடுகின்றாள்,இதன் விளைவாகவே கடவுள் கல்லானான்,கடவுளுக்கே இந்த கதி எனில் கடவுளை வணங்குபவனுக்கு என்ன கதி?
தாத்தாச்சாரி கேட்கின்றார்,(பக்கம.351)
                              **************************************


No comments: