73-அவை அஞ்சாமை
721-வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
அவையிலிருப்போரின் வகையறியும்
ஆற்றல் பெற்றவராயின் பிழை நேருமாறு பேசமாட்டார்கள்.இது தேவை
722-கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
படித்தவரில் சிறப்பானவர் யாரெனில் தான் படித்தவற்றை கற்றார் மனதில்
பதியவைக்க கூடியவர்.இது தேவை.
723-பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத் தஞ்சா தவர்.
போர்க்களத்தில் மரணத்திற்கு அஞ்சாமல் போரிடுவது யாவருக்கும் எளிதான செயல்,ஆனால் அறிவுடையோர் நிறைந்த
அவைக்களத்தில் அஞ்சாமல் பேசுவோர் சிலரே.இது தேவை.
724-கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
அறிவுடையோர் நிறைந்த அவையில் நாம் கற்றவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்
அளவுக்கு எடுத்துச் சொல்லி,நம்மை விட அதிகம் கற்றவர்களிடமிருந்து நாம் மேலும்
பலவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.இது தேவை
725-ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
அவையில் பேசும்போது அளவறிந்து பேசவும்,குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல்
பதிலுரைக்கவும் கற்றிருக்க வேண்டும்.இது தேவை
726-வாளொடன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
கோழைகளுக்கு கையில் வாள் இருந்தும் பயனில்லை. அவையில் பேசிட அஞ்சுவோர்
நூல் பல கற்றும் பயனில்லை.இது தேவை.
727-பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
போர்க்களத்தில் ஒரு பேடி கையில் உள்ள வாளைப்போன்றது,அவைநடுவில் பேச அஞ்சும் பல
நூல் கற்றவன்.இது தேவை.
728-பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுடன்
நன்கு செலச்சொல்லா தார்,
கற்றவர் சபையில் தன் கருத்துக்களை பதிய அஞ்சுபவர்,பல நூல் கற்றும் பயனில்லை.இது
தேவை.
729-கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
கற்றறிந்தோர் அவையில் பேச அஞ்சுபவர்,கல்லாதவர்களை விட
இழிவானவர்கள்.இது தேவை.
730-உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
அவையில் கேட்போர் மனம் கவரும் வகையில் பேச இயலாதவர்,இருந்தும் பிணத்துக்கு
ஒப்பாவார்.இது தேவை.
‘அவை அஞ்சாமை’ அதிகாரத்தின் பத்து
குறட்களும் பயனுள்ளவை.
******************************************************
******************************************************
மடாதிபதிகள் கூட்டம் போட்டு ,இந்து மதப்பாதுகாப்பு சட்ட்ம வேண்டும் என
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் தலைமையில் ஒரு தீர்மானம் போட்டு அன்றய உள்துறை அமைச்சர்,திரு
படேலிடம் மனுவை கொடுத்தனர்,அப்போது, ‘மடாதிபதிகாளல் மக்களுக்கு என்ன நன்மை,நீங்கள்
சுகபோகமாக வாழ ஆசைப்படுகின்றீர்,எதற்கும் பிரதம மந்திரியை(நேரு) பாருங்கள்’ என
திருப்பி விட்டார்.நேருவைப் பார்த்தோம், மனுவைப்பார்த்து சினங்கொண்ட நேரு,‘இது
மதச்சார்பற்ற நாடு,இங்கு எல்லாரும் சமம்.இதைப்பற்றி பேசவேண்டாம்,வெளியே
போய்விடுங்கள்’ என விரட்டி விட்டார்.
‘சில நாட்களில் மீண்டும் டெல்லியில் மாநாடு நடத்தி 'இந்து பாது காப்பு
சட்டம்' உருவாக படுபட்டோம்.அந்த சட்டம் தான் ,பாப்பனர்களை மட்டுமே அர்ச்சகர்களாக
கோயில்களில் நியமிக்க வகை செய்கிறது!’என தாத்தாச்சாரி கூறுகிறார்
***************************************************
No comments:
Post a Comment