63-இடுக்கணழியாமை
621-இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
மனிதனுக்கு துன்பம் வரும்போது உள் வாங்கிக்கொண்டு,அடுத்து வருவது இதைவிட
துன்பம் உள்ளதாக இருக்காது என தன்னை ஆற்றுப்படுத்துதல் நலன் தரும்.இது தேவை.
622-வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் .
வெள்ளம் போல் ஏராளமான துன்பம் வந்தாலும்,அறிவுடையவர்கள் எண்ணிய
வேகத்தில் அத்துன்பம் நீங்கிவிடும்.இது தேவை.
623-இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
துன்பத்திற்கு துன்பத்தை தரக்கூடியவர்,ஊக்கம் உடையவர்.இது தேவை.
624-மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து.
தடைகள் இருந்தாலும் காளை வண்டியை இழுத்துச் செல்வது போல் முயற்சி உடைவன்
முன்னே துன்பம் உடைபட்டு போகும்.இது தேவை .
625-அடுக்கி வரினும் அழிவிலான்
உற்ற
இடுக்கண் இடுகட் படும்.
அடுத்தடுத்து ஒருவனுக்கு தொடர்
துன்பம் வரினும்,தொடர் முயற்சி உடையவனைப் பார்த்து துன்பம் விலகி ஓடிவிடும்.இது தேவை.
626-அற்றேமென்று அல்லற் படுவோ பெற்றோமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
பணம் இருந்தபோது வாரி வழங்கியவர்,இல்லாத போது அல்லற் படுபவர் எந்த முயற்சியும் இல்லாதவர் இது
தேவை
627-இலக்கம் உடம்மிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறக் கொள்ளாதாம் மேல்.
உடம்புக்கு வரும் துன்பத்தை இயல்பாக எடுத்துக்கொள்வர் முயற்சி உடைய மேலோர்,துன்பத்தை துன்பமாக
கருத மாட்டார்.இது தேவை
628-இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
இன்பத்தை தேடி அலையாதவன், துன்பம் வரும்போது அதை இயல்பாகவே
எடுத்துக்கொள்வான்.இது தேவை.
629-இன்பத்துள் இன்பம் விழையாதவன் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
இன்பம் வரும்போது ஆட்டம் போடாதவன் ,துன்பம் வரும்போது வாட்டம்
கொள்ளார்.இது தேவை.
630-இன்னாமை இன்பம் எனக்கோளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
துன்பத்தை இன்பமாக கொள்ளும் இயல்புடையவரைப் பார்த்து ,பகையாளியும்
பாராட்டும் பெருமை கொள்வர்.இது தேவை.
‘இடுக்கணழியாமை’ அதிகாரத்தின்
பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
**********************************************************************************************************
**********************************************************************************************************
பெண்ணுக்கு 8 வயதானவுடன் திருமணம் செய்தாக வேண்டும் ,ஏன்? மநு கூறுவதாக
தாத்தாச்சாரி கூறுகிறார்.8 வயதுக்குப்பின் திருமணமாகா பெண்ணை வீட்டில்
வைத்திருந்தால் ருதுவாகி 3 ஆண்டுகளுக்குள் பெண்ணின் அப்பா திருமணம் செய்விக்க
வேண்டும்,இல்லையேல்
அவளே சுயம்வரம் நடத்தி மாப்பிளையை தேர்வு செய்து கொள்ளலாம்.அதுவரை அந்த அப்பனுக்கு
ஒரு அசிங்கமான தண்டனையை அனுபவிக்க வேண்டும்,அதென்ன?
பெண்ணின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வேளியேற்றப்படும் மாதவிடாய்
கழிவுகளை பெண்ணின் அப்பா நாக்கால் சுத்தப்படுத்த வேண்டும்.
‘மாசி மாசி ரஜஸ்தஸ்யஹ
பிதா பிபதி கோனிதம்.....’
இந்த ஸ்மிருதி விதியை வகுத்த மநு அதிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம்
கூறுகிறது,அதாவது,ஒவ்வொரு
பகிஷ்ட்டையின் (மாதவிடாய்)ஒரு பசுவை பார்ப்பனனுக்கு தானமளித்தால் அந்த
தண்டணையிலிருந்து தப்பிக்கலாம்.
இதிலிருந்தும் தப்பிக்கலாம் அதாவது திருமணமாகி ஒரு ஆண்டு கணவன் மனைவி
சேரக்கூடாது ஒளபாசன கடமைகளை முடித்தே பின்னர் சாந்தி கல்யாணம்.
இப்பொழுதும் இது கடைபிடிக்கப் படுகின்றன, தர்பைப்புல் போட்டால் தோஷம்
விலகும் என்று காலையில் திருமணம் மாலையில் சாந்தி என்றாகி விட்டது
********************************
No comments:
Post a Comment