Saturday, April 14, 2018

54- பொச்சாவாமை


                      54-பொச்சாவாமை

531-இறந்த வெகுளியின் தீதே சிறந்த
   உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

மகிழ்ச்சியினால் தக்க தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியதை மறந்துவிட்டால் ,அது சினத்தினால் ஏற்படும் விளைவை  விட தீமையானது.இது தேவை.

532-பொச்சார்பு கொல்லும் புகழை அறிவினை
   நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

வறுமை அறிவை அழிக்கும்,மறதி புகழை அழித்துவிடும்.உண்மைதான் .இது தேவை.

533-பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலத்
   தெப்பானூ லோர்க்குந் துணிவு.

மறதி கொண்டவர்களுக்கு புகழ் சேராது.எந்நூல் படித்தவர்க்கும் இதே நிலைதான்.

534-அச்சமுடையார்க் கரணில்லை ஆங்கில்லை
   பொச்சாப் புடையார்க்கு நன்கு.

கோட்டையில் வாழ்ந்தாலும் பயம் கொண்டவர்களால் எந்தப்பயனும் இல்லை,அதுபோல உயர்நிலை மனிதர்களுக்கு மறதியினால் எந்த பயனும் இல்லை.இது தேவை.

535-முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
    பின்னூ றிரங்கி விடும்.
முன் யோசனையோடு தன்னை காக்க தவறியவன், பிழையை எண்ணி பின்னாளில் வருந்த நேரிடும். இது தேவை.
                               
536-இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
   வாயின் அதுவொப்ப தில்.

மறதி இல்லா மனிதன் என ஒருவர் பெயர் எடுத்தாலே அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.இது தேவை.

537-அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
   கருவியாற் போற்றிச் செயின்.

மறதி  இல்லாமல் அக்கறையுடன் செயல்பட்டாலே அரிதான காரியம் என்பது ஏதுமில்லை.இது தேவை.

538-புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
   திகழ்தார்க் கெழுமையும் இல்.

மெச்சத் தக்க காரியங்களை செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்வில் உயர்வே இல்லை.இது தேவை.

539-இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
   மகிழ்ச்சியின் மைந்தூறும் போழ்து.

மகிழ்ச்சியினாலும்,கர்வத்தினாலும் கடமைகளை செய்யத் தவறியவர்கள் அழிந்து போனதை நினைத்துப் பார்த்து திருந்திக்கொள்ள வேண்டும்.இது தேவை.

540-உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
   உள்ளிய துள்ளப் பெறின்.
நினைப்பது நடக்கும்,சொல்வது நடக்காது.மனம்போல் வாழ்க்கை அமையும்.இது தேவை .

பொச்சாவாமைஅதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.

No comments: