78-படைசெருக்கு
771-என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
என் தலைவன் முன் நிற்காதீர்,நின்ற பலர் தோல்வியுற்று நடுகல்லாய் போனவர்களே.இது தேவை.
772-கான முயலெய்த அம்பினால் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
காட்டில் ஓடும் முயலை கொல்ல தாங்கி பிடித்திருக்கும் அம்பை விட ,எதிர்த்து வரும்
யானையை கொல்ல வேலை பிடித்திருப்பது நல்லது.இங்கே தமிழர் நாகரிகம் மறைந்து ஆரிய
கலப்பு நாகரிகம் பரவுவதை வாசகர்கள் காணலாம்.
வேலும் வாளுமே கண்ட தமிழர் நாகரிகம் அருகிலிருக்கும் எதிரிகளையும் எதிர்
வரும் கொடிய விலங்குகளையும் மட்டுமே சாகடிக்க முடியும்!
இந்தியா வந்த ஆரியர்கள் தங்களுடன் வில் அம்பும்,குதிரைகளையும் கொண்டு
வந்தனர்.அதன் பின் தமிழர்கள் நாகரிகமே தலைகீழாகிவிட்டது!
இருப்பினும் இந்த குறள் வில்லம்பு பயன்பாட்டை விட தமிழர் பெருமை பேசும்
வேலின் பயன் சிறப்பு வாய்ந்தது என இந்த குறளில் சொல்லியிருப்பதை நாம் உணரவேண்டும்.
இது தேவை.
773-பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
பகைவர்களை தாக்கும் பேராண்மை உள்ளவன் எனப்படுவர்,அதே பகைவன் தாழ்ச்சியுறும்
போது அவனுக்கு உதவும் குணம் கொண்டவனே உண்மையில் பேராண்மை(ஆளுமை) உள்ளவன்.இது தேவை .
774-கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
கைவேல் கொண்டு எதிர்வரும் யானையை தாக்கியவன்,வேலை தொலைத்து விட்டோமே என
வருந்தும் நேரத்தில் தன் மேல் பட்ட வேலே துணை என மகிழுறுபவன் உண்மையில் வீரன்.இது தேவை.
775-விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
எதிர் வரும் பகைவர் வேல் பார்த்து கண் மூடினால்,அது புறமுதுகு காட்டி ஓடும்
நிலைக்ககு ஒத்ததாகும்.இது தேவை.
776-விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
ஒரு வீரன் தன் உடல்மீது விழுப்புண் பெறாத நாளெல்லாம் வீணான நாள் என வெறுத்து விடுவான்.
முரட்டுத் தமிழனை இது போன்று பாராட்டி போர் வீரன் என பட்டம் கொடுத்து அவனை
மதி மயக்கி, வீணர்களை பாதுகாத்து, வந்தாரை வாழவைத்த/வாழவைக்கும் தமிழன் நாகரிகம்
இன்றய காலத்திற்கு ஏற்றதல்ல. தமிழனுக்கு அடிமைத்தனம் வளரவே
இந்த குறள் பயன்படும்.
தன்னிலை உணராத தமிழ்ப் புலவர்கள் அறத்தமிழன்,மறத்தமிழன் என பாடிதமிழ்
பேசும் இனத்தை ஏமாளித் தமிழனாக்கி
விட்டார்கள்,எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
777-சுழலும் இசைவேண்டி வேண்டா
உயிரார்
கழல்யாப்புக் காரிகை
நீர்த்து.
இசையோடு புகழை விரும்பி மரணத்தைப்பற்றி கவலைப்படாத வீரர்கள் காலில்
கட்டப்படும் வீரக்கழல் பெருமை உடையதாகும்.
இந்த குறளுக்கும் மேலே 776-ம் குறளுக்கு சொன்ன பொருளே பொருந்தும்.எனவே
இந்த குறளும் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
778-உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.
போர் வந்தால் இறைவனே தடுத்தாலும் போருக்கு புறப்படுபவனே சிறந்த வீரன்.
இங்கே இறைவன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மூ.வ,கலைஞர் ,சாலமன் பாப்பையா
போன்றோர் அரசன் என பொருள் கொண்டு குறளுக்கு பொருள் எழுதியுள்ளனர்.ஆனால் இதற்கு
முன் உள்ள குறள்களுக்குக்கு இறைவன் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கடவுள் எனும்
பொருள் படும்படி எழுதியுள்ளனர்.
எனவே இக்குறளிலும் இறைவனை, கடவுள் என்றே பொருள் கொள்ளத்தானே வேண்டும்? ஆகையால் மாணவர்கள் கற்க
தகுதி இழந்து விட்டது.
779-இழைத்த திகவாமைச் சாவாரை யாரோ
பிழைத்த தொறுக்கிற் பவர்.
தான் போட்ட சபதத்தால் போரில் தோற்றாலும் அந்த வீரனை யாரும் இழித்து
கூறமாட்டார்.இது தேவை.
780-புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
டிரந்துகோட் டக்க துடைத்து.
போர் வீரர்களின் வீரச்செயலை எண்ணிப்பார்க்கும் வேளையில் அந்த போரில்
சாகும் வாய்பை பெற்றவன் போற்றுதற்குறியவன்.வீரம் என உசுப்பேத்தி முரடர்களை இருநாட்டுக்காகவும் போர்க்களத்தில் மரணமடைவதை
உயர்வான செயல் என புலவர்கள் பாடி வீரர்கள் மத்தியில் மூட நம்பிக்கை விதைக்கும்
இத்தகைய குறள் பாராட்டுக்குரியது அல்ல!
மன்னர்களின் பாதுகாப்பும்,தேசப்பற்றும் காப்பது வீரர்களின் கடமை என இப்பொழுதும்
பாடப்படுகிறது.ஆன்மிக சிந்தனை போன்றுதான் தேசபற்றும் ! உலக நாடுகள் அனைத்தும்
இப்படித்தான் இயங்குகிறது! ‘ஏழாம் அறிவு இயக்க’ த்தின் நோக்கமே எல்லைகளற்ற
நாடுகளும் போர்க்களத்தில் செத்து மடியும் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்பதே!
இருப்பினும் ,இது தேவை
‘படைசெறுக்கு’ அதிகாரத்தின் 776.777.778 ஆகிய குறட்களை தவிர மற்ற 7 குறட்களும் கற்க
தகுதி வாய்ந்தவை.
No comments:
Post a Comment