Monday, April 30, 2018

98-பெருமை


                             98- பெருமை

971-ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
   கஃதிறந்து வாழ்தும் எனல்.

வாழ்க்கையில் ஒருவருக்கு ஒளி தருவது ஊக்கமே.ஊக்கமில்லாமல் வாழ்வது இழிந்த நிலை தரும்.இது தேவை.

972-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
   செய்தொழில் வேற்றுமை யான்.

பிறப்பினால் அனைவருமே சமம்.செய்யும் தொழிலில் மட்டுமே வேறுபாடு காணமுடியும்.தச்சு தொழில் செய்யும் வீட்டில் பிறந்தவர் மட்பாண்டம் செய்யும் குடும்பத்தில் வளர்ந்தால் தொழிலில் வேறுபாடு காணமுடியாது.
பெய்யும் மழை மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு நீரின் தன்மை மாறுபடுகிறது,என்பது போல்.செய்யும் தொழில் மூலம் ஒருவருக்கு குணங்கள்(சாதிகள்) மாறுபடுமே..?.இது உண்மை.

973-மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்.

சமுகத்தில் பெரிய மனிதர்கள் எல்லாம் பெரிய மனம் படைத்தவர் இல்லை,தாழ் நிலையில் இருந்தாலும் நற்செயல்களால் உயர்ந்தவராக முடியும்.இது உண்மை.

974-ஒருமை மகளிரே போலப் பெருமையும்
   தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

ஒரு பெண்ணுக்கு கற்புதான் பெருமை சேர்க்கும்,அதுபோல தன்னை தானே காத்துக்கொண்டு வாழ்பவனுக்கு பெருமை கிடைக்கும்.இது தேவை.

 975-பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை யுடைய செயல்.

அருமையான செயல்களை செய்து முடிப்பவர்,பெருமைக்கு உரியவர்களே.இது தேவை .

976-சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேமன்னும் நோக்கு.
                          
பெரியாரை விரும்பி போற்றும் உயரிய எண்ணம், அத்தகைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.இது தேவை.

977-இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான்
   சீரல் லவர்கண் படின்.

பணம் படிப்பு பதவி போன்ற சிறப்புகள் சீரற்ற கீழ்மக்களிடம் அமையுமானால் அவர்களின் செயல்களில் அகங்காரம் வெளிப்படும்.இது உண்மைதான்.

978-பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
   அணியுமாம் தன்னை வியந்து.

எல்லாரிடத்தும் பணிந்து நடப்பவர் பண்புடையவரே, இறுமாந்து இருப்போர் சிறியோரே.இது உண்மை.

979-பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.

அடக்கம் பெருமை தரும்  பெருமிதம், இல்லாதோர் அடக்கம் இல்லா சிறுமை தரும்  ஆணவம் கொண்டவரே.இது உண்மை

 980-அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
      குற்றமே கூறி விடும்.

பிறர் குற்றங்களை மறைப்பது பெருமைக்குரிய பண்பு,மாறாக பிறர் குற்றங்களை சொல்லித்திரிவது சிறுமை குணமாகும்.இது தேவை.

பெருமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
          ***************************************************************************************************
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழா ஒன்றில்,எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது பேசிய ஒரு பேச்சு, ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியது, 
இதோ,
மருத்துவத்தால்  குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர்.இந்த எண்ணம் வலுப்பெருமானால்,பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதை தவிற வேறு வழியில்லை ,கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களை கெடுத்துவுடக்கூடாது.படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள்.இப்படி கோயிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள்                            
டாக்டர்களின் திறமையை கேவலப்படுத்தும் வகையில் , ‘திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? எம்ஜியார் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பினார்.
இப்பொழுள்ள மருத்துவர்களுக்கும் திருநீறு மீது நம்பிக்கை வந்து விட்டது,நமது மருத்துவ பாடத்திட்டம் கீழ் நோக்கி போகின்றன! பிள்ளையார் கோயில் இல்லாத மருத்துவமனைகளே இல்லை எனலாம்
                                                      **************************************

No comments: