Monday, April 30, 2018

108-கயமை


                            108-கயமை

1071-மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.

கயவர்கள் என்பவர்கள் மக்களைப்போல் மக்களோடு  பழகுவார்கள் .குணத்தில் நல்லவரைப்போல் நடிப்பர்.மனிதர்களிடத்தில் தான் இப்படி இருவேறு நிலை கொண்ட மனிதர்களை காணமுடியும்.இது உண்மை.

1072-நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவலம் இலர்.

நல்லதையே நினைத்து கவலைப்படுபவர்களை விட  நெஞ்சத்தில் அவலம் கொண்ட கயவர்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர்களே.இது தேவை.

1073-தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.

தேவ குணமும்,கயவர் குணமும் ஒன்றே. இருவரும் உள்ளொன்று வைத்து புறமொன்று செயல்படுபவர்கள்,இது தேவை.

1074-அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

இரண்டு கயவர்களும் ஒன்றாக கூடினால் ஒருவரை விட இன்னொருவர் சிறந்தவர் என கர்வம் கொள்வர்.இது தேவை.

 1075-அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
     அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

விரும்பியது கிடைக்கும் வரை கீழ்மக்கள் ஒழுக்கமுடையவர்கள் போல் நடிப்பர்.மற்ற சமயங்களில் பயத்தின் காரணமாக ஒழுக்க முடையவர்களாக நடந்து கொள்வர்.இது தேவை.

1076-அறைபறை அன்னார் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க் குய்துரைக்க லான்.

மறைக்கப் படவேண்டிய செய்திகளை(ரகசியம்) கேட்டவுடன் அதை பறை போல் அடித்து மற்றவர்களுக் வெளிப்படுத்துவர் கயவர்.இது தேவை.

1077-ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.

கையை மடக்கி கன்னத்தில் குத்து விட்டவர்களுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிற நலிந்தோர்க்கு ஈயாதவர்கள் கயவர்கள்.இது தேவை.

1078-சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
    கொல்லப் பயன்படு்ம் கீழ்

சான்றோரிடம் சொன்னவுடன் நமது குறைகளை களைய வழி சொல்வர்,கயவரோ முறையிட்டோரை கரும்பு போல் கசக்கி பிழிந்து வழி சொல்வர்.இது தேவை.

1079-உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.

ஒருவர் உடை மற்றும் உணவு உண்பதைப் பார்த்து பொறாமை படும் கயவர் ,அவர்மீது தீராப்பழியை சுமத்துவதில் வல்லவராயிருப்பர்.இது தேவை.
                        
1080-எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
    விற்றற் குரியர் விரைந்து.

தமக்கு துன்பம் நேர்ந்தால் ,அதிலிருந்து தப்பிக்க தன்னையே பிறருக்கு விற்றுவிடுவர்,கயவர்.இது தேவை.

கயமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.

ஏழாம் அறிவு இயக்கத்தின் பிற வெளியீடுகள்

1-அறவழி சுய சிந்தனையுடன் மறிழ்ச்சியுடன் வாழும்   வழிகள்.’ 320 பக்கங்கள்

அடக்க விலை.ரூ.150.00,சலுகை விலை.ரூ.100.00

2-அறம் காத்த வர்மாக்கள்’ 648 பக்கங்கள்

அடக்க விலை.ரூ.500.00,சலுகை விலை.ரூ.300.00

3-பகுத்தறிவாளர் பார்வையில் (திருக்)குறள்,அடக்க விலை-250

தபாலில் பெற முறையே ரு.150+400+250 MOஅனுப்பினால் தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.அல்லது @P.Thiruvengadam,SBI A/C NO-11193540454,IFSC-SBI N 0000937
TIRUVALLUR-602001 கணக்கில் சேர்த்து தகவல் அனுப்பவும்.
நூல்கள் கிடைக்கும் இடம்.

படைவீடு திருவேங்கடம்
8-பெரியார் தெரு
கண்ணதாசன் நகர்
திருவள்ளூர்-602001



                                     இன்பத்துப்பால்
தமிழ், 1330 குறட்பாக்களைத் தவிற இதுவரை புதிய குறளை யாரும் படைக்கவில்லை. குறளுக்குப்பின் பல இலக்கியங்கள் தோன்றின.ஆனால் 2000-ம் ஆண்டுகளாகியும் மேலும் ஒரு குறள் தொகுப்பை யாரும் படைக்க முடியவில்லை,!படைக்க விரும்ப வில்லை! அது ஏனோ தெரியவில்லை.

குறளுக்கு மட்டும் பலபேர் பல புலவர்கள்,அறிஞர்கள் என பொருளுரை எழுதி விட்டனர்.எல்லாம்500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய  பரிமேலழகர்,மணக்குடவர் உரைகளை ஆதாரமாக திரட்டி இன்றய வாழும் பிரபலமான அறிஞர் பெருமக்களான கலைஞர் மற்றும் சாலமன் பாப்பையா போன்றோர் குறளின் பெருமை குறையாது உரை எழுதி உள்ளனர்.

யாருக்குமே 1330 குறட்களையும் பகுத்தறியும் சிந்தனைக்கு கொண்டு போகவில்லை, பகுத்றிவு சிங்கம் என பெயரெடுத்த கலைஞருக்கு  கூட அந்த எண்ணம் உருவாகவில்லை.அது ஏன் என எனக்கு தெரியவில்லை,

சுய சிந்தனையற்ற தமிழ் சமுதாய மக்களுக்கு குறளில் காணப்படும் அறம் மற்றும் ஆன்மிக பொருட்கள் கொண்ட குறட்களை மட்டுமே எடுத்துக்கூறினால் போதுமானது,என அமைதியான சூழலை விரும்பும் எண்ணத்தோடு குறளை சிதைக்க விரும்ப வில்லை போலும்.

இதே நிலை நீடித்தால் உலக மக்களோடு நாம் அறிவியல் சிந்தனையில் எப்படி முன்னேற முடியும்,? 
தமிழில் அற நெறிகளை வலியுறுத்தும் நாலடியார்,நான் மணிக்கடிகை,உலகநீதி,ஆத்திச்சூடி,திரிகடுகம், போன்ற நூல்களை 2000-ம் ஆண்டுகளாக பாடி வருகிறோம்.

இருந்தும் சமுதாயத்தில் அறம் தவறிய  செயல்கள் இன்றும் பெருகிவிட்டதை நாம் உணராமல் இல்லை.
இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.நமக்கு சரியான அரசை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை.படிப்பறிவற்றவர்களுக்கு வாக்கு உரிமை தரப்பட்டதற்கே இதற்கு காரணம்.படித்தால்தான் மக்ளை தேர்நெடுக்கும் வாக்குரிமை என கட்டாய சமச்சீர்கல்வி வழங்க எந்த அரசும் முன் வரவில்லை,அரசும் அதை விரும்புவதில்லை.பகுத்தறியும் கல்விக்கூடங்களை திறந்தால் பாமரனும் அரசை கேள்வி கேட்கும் அறிவை பெற்று விடுவான் ,அவன் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஆட்சியாளர்கள் தன் தலையில் கொள்ளிக் கட்டைகளை சொரிந்து கொள்வதற்கு ஈடாகிவிடும்!

ஆங்கிலேயர்களுக்கு நாம் அடிமைப்பட்டிருந்தது அப்படித்தான்.அவனுக்கு காட்டுமிராண்டித்தனமான மனிதர்களை அடக்கியாள பிரித்தாளும்(divide and rule system) சூட்சியை கையாண்டான்! அது அவனுக்கு போதுமானது.தமிழர்களின் அறிவு பூர்வ வளர்ச்சிக்கு அக்கறைகொள்ள அவனுக்கு என்ன இனப்பற்று வந்து விடப்போகிறது.?

அதே நிலையை அப்படியே உழைக்கும் மக்களை கோயில் பூசை விரதம் என இப்போதைய அரசும் செய்து வருகின்றது.அக்கரையற்ற படிப்பையும் அறிவியல் தன்மையற்ற ஆசிரியர்களையும் பணிக்கு அமர்த்தி சகாதாரமற்ற பள்ளிக்கூடங்களையும் நிறுவி வருகிறது.

ஆங்கிலேயர் காலத்து பாடத்திட்டங்களை சற்று கிராமங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளார்கள் அவ்வளவே! பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கடவுள் வாழ்த்தும்,தேசிய கீதமும் பாடச்சொல்லும் அரசு,காலையில் அறநெறி சார்ந்த பாடல்களையும்,அறிவுரைகளையும் வழங்க தவறிவிட்டது.
                               
அறநெறிகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்?
1-வீட்டில் பெற்றோர்களை வணங்கி வாழ்த்துக்களை பெற்றீர்களா?(கடவுள் வாழ்த்துப் பாடல்களை பாடத்திட்டங்களிலிருந்து  முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்)
2-பள்ளிக்கூடங்களுக்கு வருகை புரிந்துள்ள மாணவர்களுக்கு  ஆசிரியர்களை வணங்கி வாழ்த்துக்களை பெற வசதி செய்து தரவேண்டும்.

3-அன்றைய அறிவியல் செய்திகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கும் விதமாக செய்முறை வகுப்புகள் அமைய வேண்டும்.
4- எதிர்கால மக்களின் அறிவியல் தேவைகளான விஞ்ஞானம்,கணிதம் ,கணினி முன்னேற்றம்,உடலியல் மாற்ற அறிவியல்,சிந்தனை வளர்க்கும் உணவு(food for thought) முக்கியத்துவம் தரக்கூடிய பாடத்திட்டங்களை புகுத்த வேண்டும்
5- மெய்ப்பியல் தன்மை கொண்ட(pragmatic outlook)பாடத்திட்டங்களை மட்டுமே சொல்லித்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
6- அன்பும் அறனும் வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களையே பாடத்திட்ட்தில் சேர்த்தால் போதும்.

திருக்குறளில் அறத்துப்பால்,பொருட்பால் ஆகிய இரண்டு பாலில் மெய்ப்பியல் தன்மை கொண்ட குறட்களை நாம் ஏற்றுக்கொண்டு மற்ற குறட்ளை பிரித்து எடுத்து மாணவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் இத்தகைய குறட்களே வேதமானது என பறை சாற்றினால் போதுமானது.

 தமிழர்களின் பழம் பெரும் கலாச்சாரமான வீரமும் காதலும் போற்றுதற் குரியது என அரைத்த மாவையே இன்னும் எத்தனை தலைமுறைக்கு அரைத்துக் கொண்டிருப்பீர்கள் ?

ஏரு தழுவுதல்,(ஜல்லிக்கட்டு),கத்திச் சண்டை,வில்லம்பு விளையாட்டு,மல்யுத்த விளையாட்டு,குத்துச் சண்டை விளையாட்டு,கராத்தே,குங்பு போன்ற அறிவியல் தன்மையற்ற முரட்டு விளையாட்டுகளுக்கு தங்கப் பதக்கம் கொடுத்து மாணவர்கள் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்.

சாதியை ஒழிக்க வேண்டும்,இதற்கு காதல் திருமணம் தான் ஒரே வழி என பள்ளிக்காலத்தில் மாணவர்களை கெடுக்கும் பாடங்களை நீக்க வேண்டும்.
பாலியல் கல்வி அறிவியல் மட்டத்தில் முதிர்ந்த ஆசிரியர்களை கொண்டு இரு பால் மாணவர் களுக்கும் தனித்தனியே பாடங்களை வாரத்தில் ஒரு சில மணித்துளிகள் நடத்தினாலே போதும்.

இன வேறு பாடுகளை வளர்க்கும் மாவட்ட,மாநில,தேசிய விளையாட்டுகளுக்கு முக்கியத்திவம் கொடுத்து தங்கப்பதக்கங்களை கொடுக்கும்,(கெடுக்கும்) நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்.

வீடுகளில் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் மனதில் வன்முறை வளர்க்கும் விதமாக அமைந்துள்ள கார்டூன் தொடர்களை தடை செய்ய வேண்டும்.

சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை  எனவே குறளில் இன்பத்துப்பாலுக்கு பொருளெழுதும் பணியை தவிர்த்து விட்டேன்.

 உலகெங்கும் உள்ள மக்கள் நான்குவிதமான வாழ்க்கை தத்துவங்களை(philasphical life) கடைபிடிக்கின்றனர்.மதம் தொடர்பில்லாத மக்களே இல்லை எனலாம்.மத தலைவர்களும்,மத இடைத்தரகர்களும் மக்களை நாகரிகப்படுத்துகிறோம் எனும் கொள்கையில் சுய சிந்தனையற்றவர்காக மாற்றிவிட்டனர்.

1-மெய்ப்பியல் வாழ்க்கை(pragmatism)
2-பகுத்தறியும் வாழ்க்கை(rationalism)
3-பக்தியிலும் பகுத்தறியும் வாழ்க்கை(idealism)
4-அருவ வாழ்க்கை(spiritualism)

1330 குறளுக்கு பிறகு யாரும் குறட்பாக்களை எழுதவில்லை.அத்தனை குறட்களையும் ஒருவரே எழுதினார் எனும் கோட்பாட்டில் பழமை மாறா எண்ணத்தில் குறளை, ‘உலகப் பொது மறை என்று ஆரதிக்கின்றோம்!
2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் சிந்தனை வேறு,அதே எண்ணமுடைய மக்களாக நாம் இப்பொழுது இருக்க வில்லை.நமக்கு நாமே உணவு, உடை,உறைவிடம் மற்றும் அறிவியல் எல்லாவற்றிலும் நவினங்களை புகுத்தி விட்டோம்.

நமது குறளையும் அப்படி வகைப்படுத்தி மாணவர்களுக்கு பருவத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பது , ‘ஏழாம் அறிவு இயக்க’த்தின் நோக்கம்.அந்த வகையில் நான்கு வித வாழ்க்கை நடைமுறைகளில் குறட்களை வகைப்படுத்தலாம்.
1-வழிப்பாடு
2-அறச்சிந்தனை
3-சமுகப் பாதுகாப்பு
4-இன்பத்துப்பால்

இன்பத்துப்பாலில் உள்ள 220 குறட்களையும் தனியொரு புத்தகமாக வெளியிடலாம்,இதை கல்லூரி மாணவர்களின்(adults only) பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்!

மீதமுள்ள 1080 குறட்களில் 89 குறட்களை மெய்பொருள் தன்மையற்றவை என பிரித்து, மாணவர்கள் கற்க தகுதி யற்றவைஎன பிரித்து விடலாம்.

991 குறட்களையும், உலகப் பொதுமறைஎன யாவருக்கும் பொருந்தும்                   
வாழ்க்கை வழிகாட்டியாக குறட்களை பிரகடணப் படுத்தலாம்.

       மாணவர்கள் கற்க தகுதியற்ற குறட்கள்

அதிகாரம்                          தகுதியற்ற குறட்கள்
1-வழிபாடு......................................          .3,5,8&10        =4
3-நீத்தார் பெருமை...................        .21,22,23,24&25=  5
4-அறன் வலியுறுத்தல்...................................      31&38= 2
5-இல்வாழ்க்கை............................................        42&50= 2
6-வாழ்க்கை துணைநலம்.................................     .55  = 1
7-மக்கட்பேறு.......................................................       62  = 1
8-அன்படைமை....................................................      76  = 1
9-விருந்தோம்பல்.........................        83,84,85,86,87= 6
10-இனியவை கூறல்.............................................    .98 =  1
11-செய்நன்றியறிதல்......................................    101&107= 2
13-அடக்கம் உடைமை...............................     121&126=  2
14-ஒழுக்கமுடைமை.....................................    134&140= 2
16-பொறையுடைமை...............................................   151 = 1
17-அழுக்காறாமை...................................................     167= 1
18-வெக்காமை...........................................................     176= 1
19-புறங்கூறாமை.......................................................    189= 1
22-ஒப்புறவறிதல்.......................................................    213 =1
                               
23-ஈகை...........................................................      222&226=2
24-புகழ்.....................................................................    234  = 1
25-அருளுடைமை..................................................  247 =  1
27-தவம்..................................................     265,267&269=3
28-கூடா ஒழுக்கம்.....................................   .271&273 = 2
29-கள்ளாமை.......................................................  .290  =  1
33-கொல்லாமை.........................................    329&330 = 2
35-துறவு........................       343,44,45,46,48,49&50 = 7
36-மெய்யுணர்தல்...........................    353,56,57 &58 = 4
37-அவாவறுத்தல்......................................    362&365 = 2
38-ஊழ்.....................................................................   .372  = 1
43.அறிவுடைமை.......................................................426..........1
46 சிற்றினம் நேராமை..............பத்து குறட்களும் = 10
48-வலியறிதல்.......................................................  .480  = 1
55-செங்கோண்மை................................................  545 =  1
56-கொடுங்கோண்மை.............................   .559&560 = 2
57-வெருவந்த செய்யாமை................................565  =  1
71-குறிப்பறிதல்...................................................... 702  =  1
77- படைமாட்சி.....................................................  765  = 1
78-படை செருக்கு...................................    776,77.78 = 3
80-நட்பராய்தல்....................................................... 793  = 1
83- கூடா நட்பு........................................................ 829 =  1
84- பேதமை..............................................................835 =  1
85-புல்லறிவாண்மை..................................... 842&850= 2
88-பகைத்திறம் தெரிதல்......................................880 =  1
97-மானம்................................................................... 969 =  1
103-குடி செயல் வகை.........................................1023 =  1
105-நல்குரவு.............................................................1042 =  1
                                           ...............
                                              90
                                           ..............



No comments: