Sunday, April 22, 2018

75-அரண்


                             75-அரண்

741-ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
   போற்று பவர்க்கும் பொருள்.

படை யெடுப்பவர்க்கும் கோட்டை பயன்படும்,தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் கோட்டை பயன் படும்.இது தேவை.

742-மணிநீரும் மண்ணும்  மலையும் அணிநிழற்
   காடும் உடைய தரண்.

மணிபோல தெளிந்த நீரும், பரந்த நிலம்,உயர்ந்த மலை,அடர்ந்த காடு இவைகளே ஒரு நாட்டுக்கு அரண்களாகும்.இது தேவை.

743-உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்.

உயரம்,அகலம்,உறுதி,வலிமை இவை நான்கும் ஒருங்கே அமைந்திருப்பதே அரணுக்குரிய சிறப்பாகும்.இது தேவை.

744-சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
   ஊக்கம் அழிப்ப தரண்.

காக்க வேண்டிய இடம் சிறு பரப்பு கொண்டதாகவும்,கோட்டையின் சுற்று சுவர் பெரியதாகவும் உள்ளது,பகைவரை அச்சுருத்தும் அரணாகும்.இது தேவை.

745-கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.

பல நாள் முற்றுகையிட்டு போரிட்டாலும்,உள்ளே இருக்கும் மக்களுக்கு உரிய உணவும் அளித்து போரிட வாய்ப்புள்ளதே அரண்.இது தேவை.

746-எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
   நல்லாள் உடையது அரண்.

எல்லா பொருளும் தன்னகத்தே கொண்டு,உள்ளே உள்ள வீரர்களுக்கு உணவு படைத்து எதிரியிடம் போர் புரியவல்லதே அரண்.இது தேவை.

747-முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரியது அரண்.

முற்றுகையிட்டோ அல்லது முற்றுகை இடாமலோ அல்லது வஞ்சனையாலோ பகைவரால் கைபற்ற முடியாததே அரண்.இது தேவை .

748-முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
   பற்றியார் வெல்வது அரண்.

கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும் இடத்தை விட்டுவிடாமல் முற்றுகையிட்ட பகைவரிடம் போர் புரிய வல்லதே அரண்.இது தேவை.

749-முனைமுகத்து மாற்றார் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.

போர் தொடங்கிய உடனே முற்றுகையிட்ட பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் போர் புரியவல்லது அரண்.இது தேவை.
                             
750-எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
   இல்லார்கண் இல்லது அரண்.

என்னதான் மாட்சிமை பொருந்திய அரணாக இருந்தாலும் அரணுள் இருக்கும் படை வீரர்களால் திறம்பட போர் புரிய வல்லவர்கள் இல்லையெனில் எல்லாமே வீண்.இது தேவை.
அரண்அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
                   ***********************************************

பேசும் மொழியால் இனமா? இரத்த வழியால் இனமா? 

என் மொழி இயல் ஆய்வுப்படி(காண்க-அறம்காத்த வர்மாக்கள்)
இந்தியா முழுவதும் பரவியுள்ள இனங்கள் இரண்டே வகைதான்,1- தமிழினம்,2- ஆரியம்.

மொழி மாற்றம்,இனக் கலப்பு நிகழ்ந்து இன்றய நிலையான சாதிய அமைப்புகளை நாம் காண்கின்றோம் என்பதே!
அதாவது இந்திய முழுவதும் பல மொழி பேசும் 5 தொழில் குணம் கொண்ட இனங்களே வாழ்கின்றன,1-பஞ்சமர்,2- சூத்ரா,3-வைசியா,4-சத்ரியா,5-ஆரியா.அவ்வளவே.!
இந்திய அரசியலமைப்பில் சாதிகளற்ற சமுதாயம் அமைக்கப்படவேண்டும் என்பது அரசின் நோக்கம்,ஆனால் இது சாத்யப்பட இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்!
                           **************************************

No comments: