Tuesday, April 10, 2018

51-தெரிந்து தெளிதல்


                          51-தெரிந்து தெளிதல்

501-அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.

உறுதியான அறவழி,நாணயமான செல்வம்,இன்பத்தில் நாட்டமில்லாதவனை,உயிரின்பால் ஈர்ப்பில்லாதவனை தேர்வு செய்து பணிக்கு அமர்த்த வேண்டும்.இது தேவை.
                           
502-குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
   நாணுடையான் கட்டே தெளிவு.

குற்றம் புரிதலிலிருந்து விலகி,பழிச்சொல்லுக்கு அஞ்சும் பேருடையவனே உயர்குடி பிறந்தவன்,என தெளிவு கொள்க.இது தேவை.

503-அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
   இன்மை அரிதே வெளிறு.

பல அரியவகை நூல்களை கற்றவரும்,எந்த குறைவும் இல்லாதவர் என புகழப்பட்டாலும்,அவரிடமும் சில அறியாமை இருக்கவே செய்யும்.இது தேவை.

504-குணம்நாடிக் குற்றமு நாடி அவற்றுள்
   மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரிடம் நன்கு பழகி அவரிடம் என்ன நிறை குறை உள்ளது என ஆய்ந்த பின்னரே தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.இது தேவை.

 505-பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்.

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாக  கொண்டு அவர் தரத்தினை அறிந்திடலாம்.இது தேவை.

506-அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
   பற்றிலர் நாணார் பழி.

அறச்சிந்தனையற்றவரை ஒரு பணிக்கு தேர்வு செய்வது கூடாது.அவர் பழிக்கு அஞ்சாமல் தவறிழைப்பவராக இருக்கலாம்.இது தேவை .

 507-காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
       பேதமை எல்லாந் தரும்.

அன்பின் மிகுதியால்  அறிவற்ற  ஒருவரை தேர்வு செய்வதன் மூலம் பயனற்ற செயல்களே விளையும் .இது தேவை .

508-தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பைத் தரும்.

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவனை துணை கொண்டால் பின்னாளில் அவனால் தீரா துன்பம் விளையும்.இது தேவை.

509-தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.

ஆரய்ந்து பார்க்காமல் யாரையும் நம்பிவிடக்கூடாது.இது தேவை.

510-தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
   தீரா இடும்பை தரும்.

ஆராயாமல் தேர்வு செய்வதும் ,தேர்வு செய்தபின் அவர்மீது ஐயுறுவதும் தீரா துன்பம் தரும்.இது தேவை.
தெரிந்து தெளிதல்அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
                        ******************************************
திருவரங்கத்தில் சூத்ரர்களும்,பஞ்சமர்களும் ஆலய நுழைவு போராட்டும் நடக்கிறது,சேதி கேட்ட சந்நிரசேகர் அழுதே விட்டார்,துறவி அழலாமா?’(பக்கம்-104) கண்ணைத் துடைத்துக்கொண்ட சங்கரர், ‘ஆச்சார அனுஷ்டானங்கள் அடிப்படையில் பகவானை  விக்கிரகங்களில் இருத்தி வைத்துள்ளோம்,பஞ்சமனோ,சூத்ரனோ கோயிலுக்குள் வந்தால் பகவான் பட்டென ஓடிப்போய்விடுவார்,மீண்டும் அதற்கு சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)  செய்யவேண்டும்இதை தடுக்க அக்ராகாரத்தில் கூடி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.கோயில் முன் கூடியவர்கள் கண்களில் பாப்பாத்திகள் மிகாய்ப்பொடி தூவிவிடுவது என்றுஅவ்வாறே செய்யப்பட்டது,
கோயிலுக்கு போய் சாமியைப் பார்க்கலாம் என்று இருந்தேன்,இனி கண்ணே தெரியாது போலிருக்கே,’என சொல்லியபடி அங்கிருந்த சிலர் ஓடினார்கள்.
பாப்பாத்திகள் மீது போலிசு தடியடி நடத்தினார்கள்,இதை கேட்ட சங்கரர், ‘அய்யோ அபச்சாரம்என அழுதே விட்டார்.
இதனை தடுக்க,பிராமணர்களுக்கு பாதுகாப்பு வேண்டி , ‘Association of mutts) ஆரம்பிக்கப்ட்டது,தாத்தச்சாரி செயலர் ஆனார்,சந்திரசேகர்,தலைவரானார்,அமைப்பின் பதிவேட்டில், ‘நாராயணஸ்மிருதிஎன சங்கரர் கையெழுத்திட்டார்.
                        **************************************

No comments: