Monday, April 30, 2018

100-பண்புடைமை


                          100-பண்புடைமை

991-எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
   பண்புடைமை என்னும் வழக்கு.

யாருமே தன்னை எளிதில் அணுகும்படி நிலையில் வாழ்ந்தால்,பண்புடைமையை அடையலாம்.இது தேவை.

992-அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் இவ்விரண்டும்
   பண்புடைமை என்னும் வழக்கு.

அன்பாக இருத்தலும்,நல்ல குடி பிறத்தலையும் தீர்மானிப்பது நற்பண்புகள் தான்.இது தேவை.

993-உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
   பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

உறுப்புகள் உடலில் இருப்பதால் மக்கள் என்று சொல்லிவிடமுடியாது.நற்பண்புகள் ஒப்பிட்டுப் ஒத்து இருப்பவர்களே மக்கள் எனப்படுவர்.இது தேவை.

994-நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
   பண்புபா ராட்டும் உலகு.

நற்பண்புகள் கொண்ட பிறருக்கு பயன்படும் பண்பாளர்களை உலகம் பாராட்டும்.இது தேவை .

995-நகையுள்ளும் இன்னா திழ்ச்சி பகையுள்ளும்
   பண்புள பாடறிவார் மாட்டு.

நற்பண்பு கொண்டவர்கள் விளையாட்டாக கூட பகைவர்களை புண்படும்படி பேசமாட்டார்கள்.இது தேவை.
                          
996-பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
   மண்புக்கு மாய்வது மன்.

 பண்புள்ளவர்களை பற்றியிருப்பதால் உலகம் இன்னும் அழியாமல் உள்ளது.இது தேவை .
 997-அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்.

அரம் போல் கூர்மையான அறிவுடையவர்களாக இருப்பினும் பண்பில்லாதவர்களை  மரம்போல் கருதப்படுவர்.இது தேவை.

998-நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
      பண்பாற்றார் ஆறுதல் கடை.

நட்புக்கு ஏற்றவராக இல்லாவிட்டாலும் நற் பண்பு  கொண்டோர் அவர்களிடத்தில் பொறுமையுடன் நடக்கா விட்டால் அது இழிவான செயலாகும்.இது தேவை.

999-நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
   பகலும்பாற் பட்டன் றிருள்.

நண்பர்களுடன் பழகி மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்களுக்கு உலகம் பகலில் கூட இருட்டாக இருக்கும்.இது தேவை.

1000-பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று.

நல்ல பால் அழுக்கு கலத்தில் ஊற்றி வைத்தால் கெட்டுவிடும் ,அதுபோல் பண்பற்றவனிடம் உள்ள செல்வம் பயனற்று போகும்.இது தேவை .
பண்புடைமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை .

No comments: