Tuesday, April 10, 2018

49-காலமறிதல்


                          49-காலமறிதல்

481-பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
   வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

காக்கை தன்னைவிட பலமுள்ள கோட்டானை பகலில் வென்றுவிடும்,அதுபோல ஒரு அரசன் தன் பகைவரை வெல்லும் நேரம் வரை காத்திருக்க வேண்டும்.இது தேவை

482-பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
   தீராமை ஆர்க்குங் கயிறு.

காலந்தவறாமல் தன் கடமை ஆற்றுவது என்பது ஒருவருக்கு, இடமாறிச் செல்லும் செல்வத்தை இழுத்து கட்டும் கயிறு போன்றதாகும்.இது தேவை.

483-அருவினை யென்ப உளவோ கருவியான்
   காலம் அறிந்து செயின்.

காலம் அறிந்து செயல்பட்டால் முடியாதது என ஒன்று இல்லை .இது தேவை.
                        
484-ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
   கருதி இடத்தாற் செயின்.

நேரம் இடம் கருதி செயலாற்றினால் உலகமே ஒருவன் கைக்குள் வந்துவிடும்.இது தேவை.

485-காலம் கருதி இருப்பவர் கலங்காது
   ஞாலம் கருது பவர்.

உலகத்தையே தன் வசப்படுத்த எண்ணுபவர் ,அதற்கான காலத்தை எண்ணிக்(காத்துக்) கொண்டிருப்பர்.இது தேவை .
                              
486-ஊக்க முடையான் ஒடுக்கும் பொருதகர்
   தாக்கத்திற்குப் பேருந் தகைத்து.

விடா முயற்சி உடையவன் ,தன் எதிரியை தாக்க ஆட்டுக்கடா காலை பின் வாங்கி காத்திருக்கும் செயலைப் போன்றதாகும்.இது தேவை .

487-பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
   உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

எதிரி தாக்கிய உடனே ,அறிவுடைய ஒருவர் உடனே திருப்பி தாக்க மாட்டார்,எதிரியை வெல்லும் காலம், இடம் பார்த்து காத்திருப்பர்.இது தேவை.

488-செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காந் தலை

பகைவரைக் கண்டால் பதுங்கிச் செல்,அழிவுக்காலம் வரும்போது அவர் தலை கீழே விழும்.இது தேவை.

489-எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
   செய்தற் கரிய செயல்.

காலம் கனியும் வரை காத்திருந்து செயற்கரிய செயலை செய்து முடிக்க வேண்டும்.இது தேவை.

490-கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
   குத்தொக்க சீர்த்த இடத்து.
கொக்கு, தகுதியான தன் உணவிற்கு ஓடையில் காத்திருப்பது போல், ஒருவர் தன் காரியம் கைக்கூட காத்திருக்க வேண்டும்.இது தேவை.

காலமறிதல்அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை .

No comments: