Saturday, April 28, 2018

94-சூது


                              94-சூது

931-வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
   தூணுடிற்பொன் மீன்விழுங்கி அற்று.

தூண்டிலில் மாட்டிவிடப்படும் சிறு மீனுக்கு பொன்மீன் எனப்பெயர்.அந்த மீனை விழுங்க வரும் பெரிய மீன் சிக்கி தவிப்பது போல்.சூதின் வெற்றி அமையும் .இது தேவை.

932-ஒன்றெய்தி நூறிழக்கும் சூதற்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

ஒரு பொருள்  பெற்று நூறு பொருள்  இழக்கும் சூதாடும் பழக்கமுடையோர்க்கு வாழ்வில் நல்லது நடக்க வழியே இல்லை.இது தேவை.

933-உருளாயம் ஒவாது கூறின் பொருளாயம்
   போஒய்ப் புறமே படும்.

சூதாட்டத்தினால் பெரும் வருவாயை பற்றி ஓயாது கூறினால் வந்த பொருளும் போய்விடும்.இது தேவை.

934-சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
    வறுமை தருவதொன்று இல்.

சீறும் சிறப்பும் இழக்கும் சூதால் வரும் கேட்டை விட வறுமையால் வரும் கேடு ஒன்றும் பெரிதல்ல.இது தேவை.

935-கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்.

சூதாடுவோர் அவரது கையையும் சூதாடும் இடத்தையும் அதன் மூலம் வரும் பொருளையும் பெருமையாக கருதிவந்தவர் அந்த பொருளையெல்லாம் இழந்தோர் கதை முன்னமே உண்டு.இது தேவை
                          
936-அகாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
   முகடியான் மூடப்பட் டார்.

சூதாட்டம் எனும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறு நிறைய உணவு உண்ண முடியாமல் துன்பத்தில் உழல்வர்.இது தேவை.

937-பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்.

சூதாடும் இடத்தையே இருப்பிடமாக கொண்டோர்,முன்னோர்கள் சேர்த்த சொத்தும் பண்பு நலனும் கெடும்.இது தேவை.

938-பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇஅருள் கெடுத்து
   அல்லல் உழப்பிக்கும் சூது.

சூதாட்டம் பொருளை அழிக்கும்,பொய் சொல்லச் சொல்லும்,கருணை உள்ளம் இருக்காது,துன்பத்தையும் கொடுக்கும்.இது தேவை.

939-உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
   அடையாளம் ஆயங் கொளின்.

சூதாட்டத்தை ஒருவன் விரும்பினால் உடை,உணவு கல்வி,புகழ் ,செல்வம் ஐந்தும் காணாமல் போகும்.இது தேவை.

940-இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
   உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பெண் மீது மோகம் கொண்டதால்  உடல் மெலிந்து துன்பம் நேரிட்டாலும்  அனுபவிக்கும் போதெல்லாம் உடல்மீது காதல் உண்டாவது போல்,பொருளை இழக்கும் போதெல்லாம் சூதின் மீது காதல் பெருகும்.இது தேவை.
சூதுஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை

No comments: