Saturday, April 21, 2018

68-வினை செயல்வகை


                      68-வினை செயல்வகை

671-சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
   தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

துணிவுடன் ஒரு செயலில் இறங்கியபின் சாதக பாதகங்களைப்பற்றி யோசித்து,காலம் தாழ்த்துவது தீதாக முடியும்.இது தேவை.

672-தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
   தூங்காது செய்யும் வினை.

மெதுவாக செய்யவேண்டிய வேலையை மெதுவாக செய்யலாம்.ஆனால் விரைந்து செய்ய வேண்டிய வேலைகளில் தாமதம் கூடாது.இது தேவை.

673-ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.

முடியும் இடங்களில் நினைத்த செயலை முடிப்பது நல்லது ,முடியாத இடத்தில் காரணத்தை ஆராய்ந்து அறிந்து அந்த செயலை முடிக்க வேண்டும்.இது தேவை.

674-வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
   தீயெச்சம் போலத் தெறும் .

ஒரு செயல் அல்லது ஒருவன் மீது கொண்ட பகை இந்த இரண்டையும் முடிக்காமல் விட்டுவிட்டால் ,நீரு பூத்த நெருப்புபோல கேடு விளைவிக்கும்.இது தேவை

    675-பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
      இருள்தீர எண்ணிச் செயல்.

பொருள்,கருவி, காலம்,செயல் மற்றும் இடம் இவை ஐந்தும் சரியான முறையில் அமையபெற்றால் காரியம் கைகூடும்.இது தேவை.

676-முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
   படுபயனும் பார்த்துச் செயல்.

ஒரு செயலில் ஈடுபடும் போது முடிவு நிலையில் ஏற்படும் பயனும் அதனால் ஏற்படும் இடையூறுகளையும் அறிந்து செயலாற்ற வேண்டும்.இது தேவை.

677-செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளங் கொளல்.

ஒருவன் ஒரு செயலில் ஈடுபடுமுன் அதைப்பற்றி முற்றிலும் உணர்ந்தவனின் கருத்தினை அறிந்து கொள்ளவேண்டும்.இது தேவை.

678-வினையான் வினையாக்கி கோடல் நனைகவுள்
   யானையால் யானையாத் தற்று.
                           
ஒரு செயலில் இறங்கும் முன் அச்செயல் வழியாக இன்னொரு செயலையும் முடிக்க முடியும் என நினைப்பது என்பது பழகிய ஒரு யானையைக் கொண்டு இன்னொரு யானையை பிடித்தல் போன்றதாகும்.இது தேவை .

679-நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
   ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

ஒத்துவராதவரை நண்பனாக்கிக் கொள்வதை விட,நல்ல உதவி செய்து தம்முடன் பொருந்துமாறு நண்பரை சேர்த்துக்கொளல் நல்லது .(நட்டார் நண்பர்.ஒட்டார்-ஒத்துவரதவர்)இது தேவை.

680-உறைசிறியார்உண்ணடுங்கல்அஞ்சிக் குறைபெறிற்
   கொள்வர் பெரியார் பணிந்து.

 சிறியருக்கு பயன் கிடைக்கும் என்றால் பெரியாரை பணிந்து  ஏற்றுக்கொள்வர்.இது தேவை.

வினை செயல்வகைஅதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
    ************************************************************************
‘நாஸ்த்தி ஸ்த்ரீனாம்
பரத் யக்ஞயஹா
ந வ்ரதம்
நாப உபோஷனம்’

விரதம் இருக்கலாம்,ஆனால் சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்து பெண்களும்,சூத்தரர்களும் விரதம் இருக்க காடாது என தனது ஆணையை நிறுவுகிறார் மநு!
லெளகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்குத்தான் இதுவேண்டும் அது வேண்டும் என விரதம் இருப்பார்கள்,எல்லாம் துறந்த துறவிகளுக்கு ஏன் விரதம்?
சாதுர்மாசிய விரதம்? ,இது சந்தியாசிகள் நிலை கொள்ளாமல் சுற்றி அலையும் காலத்தில் 4 மாத மழைக்காலத்தில் ஒரே இடத்தில் விரதம் இருப்பது.
                     **************************************
                             

No comments: