Thursday, April 19, 2018

66-வினைத்தூய்மை


                        66-வினைத்தூய்மை

651-துணைநலம் ஆக்கும் தரூஉம் வினைநலம்
   வேண்டிய எல்லாம் தரும்.

ஒருவனுக்கு அமையும் சிறந்த மனைவியும்,நட்பும்  ஆக்கம் தரும்,அதே நேரத்தில் ஒருவன் செய்யும் நல்வினையால் வேண்டியதெல்லாம் கிடைக்கும்.இது தேவை.

652-என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
   நன்றி பயவா வினை.

புகழும் ,நன்மையும் தராத செயல்களை விட்டொழிக்க வேண்டும்.இது தேவை.

653-ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
   ஆஅதும் என்னும் மவர்.

மேலும் மேலும் உயரவேண்டும் என எண்ணம் கொண்டவர்கள்,தமது புகழுக்கு களங்கம் நேராமல் பார்த்துக்கொள்வர்.இது தேவை.

654-இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
      நடுகற்ற காட்சி யவர்.

தெளிவான சிந்தனை உடையவர்,தனக்கு துன்பம் நேர்ந்தாலும் இழிவான செயலை செய்ய மாட்டார்.இது தேவை.

 655-எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.

பின்னாளில் வருத்தப்படக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது,அப்படி செய்தாலும் மீண்டும் அத்தகைய தவறை செய்யக்கூடாது.இது தேவை.

656-ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
   சான்றோர் பழிக்கும் வினை.

பெற்ற தாயின் பசியைப்போக்க ஒருவன் அதர்ம வழியில் சென்று அந்த பசியை போக்க முயலக்கூடாது,இது தேவை.
                                
657-பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
   கழிநல் குரவே தலை.

பணக்காரனாக ஆசைப்பட்டு பழிக்கு அஞ்சாமல் வாழ்வதை விட வறுமையிலும் செம்மையாக வாழ்வதே மேல்.இது தேவை.

658-கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்         ...      
   முடிந்தாலும் பீழை தரும்.

வேண்டாம் என ஒதுக்கப்பட்ட செயல்களை ,பணம் சேர்க்க ஆசைப்பட்டு அச்செயலை செய்தால் துன்பமே வரும்.இது தேவை.

659- அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
     பிற்பயக்கும் நற்பா லவை.

பிறர் கண்கலங்க சேர்த்த செல்வம் அழுதுகொண்டே போகும் ,நல்வழியில் சேர்த்த செல்வம் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து சேரும்.இது தேவை.

660-சலத்தால் பொருள்ஞெய்தே மார்த்தல் பசுமண்
   கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
                                       
தவறான வழியில் பொருளை சேர்த்து அதனை காப்பாற்ற நினைக்கும் முயற்சி எவ்வாறு எனில் ,பச்சை மண் பாத்திரத்தில் தண்ணீரை சேர்க்கும் முயற்சி ஒத்த தாகும்.இது தேவை.

வினைத்தூய்மைஅதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
                 ***************************************************
கடவுள்களுக்கு பெயர்வரக் காரணங்கள்,வடமொழிக் கதையின் தமிழாக்கம்..
சரவணன்-பரமசிவன் காமத்தின் உச்சியில் இருக்கும் போது பார்வதி உடன்பட மறுக்கின்றாள்,அப்போது பார்வதியை வன்புணர்ச்சி செய்யும்போது,சிவனின் விந்து தவறிப்போய் நதியில் கலக்கிறது ,அது மிதந்து போய் நாணல்(சரம்)வனத்தில் சேர்ந்து சரவணன் தோன்றுகிறான்.
கந்தன்-ஸ்கந்தன் என சொல்ல வேண்டும்.ஸ்கந்தம் என்றால் விந்து,இதுவும் சிதறிப்போனதால் கந்தசாமி உருவானான்.
கணபதி-நாம் நினைப்பது போல் சிவனுக்கு பிறக்கவில்லை,பார்வதி குளிப்பதை சிவன் பார்க்க,அப்போது பார்வதி,   சிவன் தலையை கொய்து,யானையின் தலையை ஒட்டவைக்கின்றாள்,யானையால் தான் பார்த்த  பார்வதியின் உடல் பாகங்களை வெளியில் சொல்ல முடியாதே,அதனால்..சிவனின் மறுவே கணபதி!
                                 *************************************      

No comments: