84-பேதமை
831-பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
பேதமை(அறியாமை) என்பது என்ன வென்றால்,எது நன்மை? எது தீமை பயக்கும் ?என அறியத்தெரியாமல் தீமைகளை
தேடிக்கொளல் ஆகும்.இது தேவை.
832-பேதமையுள் எல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
அறியாமைகளிலெல்லாம் அறியாமை யாதெனில் ஒழுக்க கேடான
செயல்களில் கவனம் செலுத்துவது ஆகும்.இது தேவை.
833-நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
நாணமின்மை,ஆசையின்மை.நன்மையானவற்றை
நாடாமை,காக்க
வேண்டிய எதையும் நாடாதிருப்பது ஆகியவை
அறிவற்றவர்களின் செயல்களாகும்.இது தேவை.
834-ஒதி உணர்ந்தும் பிறர்குறைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
படித்ததை உணர்ந்தும்,உணர்ந்ததை பிறருக்கு சொல்லாமல் வாழ்பவர்கள் பேதையிலும்
பேதையானவர்கள்.இது தேவை.
835-ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
இப்பிறவியில் பேதையாய் வாழும் ஒருவன் எழு பிறப்பும்
பேதையாய் வாழ ஆற்றல் படைத்தவனாகிறான்.இது மெய்ப்பியல் தன்மைக்கு மாறுபட்ட
கருத்துக் கொண்டது.எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
836-பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
ஒழுக்க நெறியறியாப் பேதை ஒரு செயலை துவங்கினால்
முடிக்க முடியமல் தன் செயலும் கெட்டு தானும் கெடுவான்.இது தேவை.
837-ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
பேதைகளிடம் இருக்கும் பெருஞ்செல்வம் ,அயலார் அனுபவிக்க மட்டும பயன்
படுமே தவிர பசித்தவர்களுக்கு பயனளிக்காது.இது தேவை.
838-மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றைடைமை பெறின்.
ஒரு பேதை என்பவன் நல்லது கெட்டது தெரியாதவன்,அவனிடம் கிடைத்த பொருளின் நிலை
எத்தகையது எனில் ,ஒரு பித்தன் கள்ளுண்ட நிலை போலாகிவிடும்.இது தேவை.
839-பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
பேதையரிடம் நட்பு கொண்டு பிரிந்தால்,நாம் எத்தகைய துன்பத்திற்கும் ஆளாவதில்லை.இது தேவை
.
840-கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
சான்றோர்கள் நிறைந்த சபையில் ஒரு பேதை புகுவது என்பது
ஒருவன் கழுவாத காலை படுக்கையில் வைத்தல் போலாகும்.இது தேவை
‘பேதமை’ அதிகாரத்தின் 835-ம் குறளைத்தவிற மற்ற
குறட்கள் கற்க தகுதி வாய்ந்தவை.
*************************************************
மூவேந்தர்களும் பார்ப்பனர்களும்!
மூவேந்தர்களும் பார்ப்பனர்களும்!
மக்களிடையே மூடநம்பிக்கையை புகுத்தி அவைகளை பாதுகாப்பதே அரசின்
நோக்கங்களாக கருதப்பட்டது.
மூவேந்தர்கள் செய்தது என்ன?
கடவுள்களை உற்பத்தி செய்தார்கள்,கோயில்களை கட்டினார்கள்,புண்ணியம் சம்பாதிக்க
வேண்டும் என பார்ப்னர்கள் நலத்தை பாதுகாப்பதே தங்கள் லட்சியங்களாக கொண்டு
செயல்பட்டனர்.
பின்னர் ஆண்ட முசுலீம்கள்,வெள்ளையர்கள் ஆண்டார்கள்,அவர்களும் சாதி,சம்பரதாயங்கள்
பாதிக்காத வண்ணம் ஆட்சி செய்தார்கள்.
அதன் பின்னர் அண்ணா அமைத்த தி.மு.க ஆட்சி,கடவுள் ஒழியவேண்டும்,மதம் ஒழிய வேண்டும்,சாதி ஒழியவேண்டும் என
கோஷமிட்டனர்,இன்னும் ஒழிந்த பாடில்லை.!நடுவீட்டில் கடவுளை வணங்காதே பெண்களே இல்லை!
பின் எப்படி மூடநம்பிக்கை ஒழியும்?
***************************************
No comments:
Post a Comment