Tuesday, April 10, 2018

48-வலியறிதல்


                             48- வலியறிதல்

471-வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
   துணைவலியுந் தூக்கிச் செயல்.

செயலின் வலிமை,தனது வலிமை,எதிரியின் வலிமை,நண்பரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.இது தேவை.

472-ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
   செல்வார்க்குச் செல்லாத தில்.

தம்மால் செய்து முடிக்க கூடிய செயலை நன்கு ஆராய்ந்து முயன்றால் முடியதது ஏதுமில்லை.இது தேவை.

473-உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
   இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமையின் (உடல்,மனம்,படைபலம்)அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலில் இறங்கி தோல்வி  கண்டவர்கள் பலர் உண்டு.இது தேவை.

474-அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
   வியந்தான் விரைந்து கெடும்.

சுற்றத்தாரை மதிக்காமலும் தன் சுய வலிமையை உணராதவனும் தன்னை தானே பெரியவன் என எண்ணிக் கொண்டிருப்பவன் விரைந்து கெட்டுப்போவான்.இது தேவை.

 475-பீலிப்பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகாக இருந்தாலும்கூட அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் .இது தேவை.

476-நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
   உயிர்க்கிறுதி ஆகி விடும்.

தன் சுய பலம் உணராத ஒருவர், நுனிக்கொம்பு ஏறி அதற்கு மேலும் எற முயற்சித்தால் என்ன ஆகுமோ அதுபோல ஆகிவிடுவார்.இது தேவை.

477-ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
   போற்றி வழங்கு நெறி.

ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.இது தேவை.

478-ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
   போகா றகலாக் கடை.

அளவுக்கு மீறிய செலவு இல்லை என்றால் ,வரவு குறைவாக இருந்தாலும் கேடில்லை.இது தேவை.

479-அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
   இல்லாகித் தோன்றாக் கெடும்.

திட்டமிட்டு வாழத் தெரியாதவன் வாழ்க்கை, வளமிருந்தாலும் கெட்டுப் போகும்.இது தேவை.

480-உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
   வளவரை வல்லைக் கெடும்.

தன்னிடம் உள்ள பொருளின் அளவை மதிப்பிட்டுப் பார்க்காமல்,அளவில்லாமல் தானம் செய்தால் அவனது வளம் கெட்டுவிடும்.இது தேவை.

வலியறிதல்அதிகாரத்தின் 9 குறட்களும் ஒருவன் சுய வலிமை அறியும் விதமாக வாழ்க்கை நடைமுறைகளை ஆற்றுப்படுத்துகிறது.ஆனால் 480-ம் குறள்,- 9 மற்றும் 23-ம் அதிகாரங்களான முறையே விருந்தோம்பல் மற்றும் ஈகையின் குறட்கள், ஒருவன் தன்னிடம் உள்ள பொருட்களை பிறருக்கு கணக்கின்றி வாரி வழங்குதல் மூலம் அவர் வையத்துள் சிறப்பெய்துவர் என பாடப்பட்டுள்ளது. இது முரணாக தெரியவில்லையா?

அதாவது ஒருவரே இதுபோன்று கருத்துக்களில் முரண்பட முடியாது.பலர் பாடிய குறளின் தொகுப்பே , ‘திருக்குறள்என்பது புலனாகிறது அல்லவா?
                  **************************************
மூடி மறைத்த வேதங்களை,அதாவது பார்ப்பனர்களே வீட்டில் பூட்டி வைத்த வேதங்களை எல்லாரும் படிக்க வேண்டும் என , ‘ஆரிய சமாஜம்எனும் ஒரு இயக்கத்தை தயானந்த சரசுவதி என்பவர் ஆரம்பித்தார்.இந்தியா முழுவதும் பரவிய இந்த இயக்கம் பார்ப்பனர்களிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியதாக,தாத்தாச்சாரி கூறுகின்றார்.
வேதத்தை பிராமணர்கள் தொழிற்கருவியாக பயன்படுத்திவிட்டனர்.வேதத்தை பிராமணர் அல்லாதவர்களும் படிக்க வேண்டும்என ஆரிய சமாஜம் வலியுறுத்தியது.
                            **************************************

No comments: