80-நட்பாராய்தல்
791-நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
யோசிக்காமல் ஏற்றுக் கொண்ட நட்பின் மூலம் ஏற்படும் தீமைகளால் விடுபட
முடியாத அளவுக்கு கேடு விளைவிக்கும். இது தேவை.
792-ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
ஆய்ந்து பார்க்காமல் ஏற்றுக்கொண்ட நட்பு,கடைசியில் ஒருமரணத்திற்கு
வித்திடும் அளவுக்கு துயரம் தரும்.இது தேவை.
793-குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு,
குணமென்ன? குடிபிறப்பு எத்தகையது? குற்றவாளியா? இவைகளை ஆய்ந்து பார்த்து ஒருவரிடம் நட்பு கொள்ள
வேண்டும்.
இத்தகைய குறளால் மக்கள் மனதில் வேற்றுமை உணர்வு வளராதா?
குணம் பார்த்து நட்பு கொள் என்பது சரி! குற்றவாளியைக்கூட
தவிர்க்கலாம்! ஆனால் இனம் பார்த்து நட்பு
கொண்டால் மற்ற இனத்துக்காரர்கள் பொறாமை கொள்ள மாட்டார்களா?
இப்படியே பாடிய பாட்டை நாம்
அங்கீகரித்தால் தீண்டாமையை எப்படி ஒழிக்க இயலும்? திருக்குறளை உலகப் பொதுமறை
என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
794-குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும்
நட்பு.
நல்ல குடிபிறந்தவரையும்,பழி சொல்லுக்கு அஞ்சி நடக்கும் பண்பாளரையும் கண்டறிந்து நட்பு கொள்ள வேண்டும்.இது முந்தைய
குறளுக்கு(793) முரணாக உள்ளது,எனினும் இத்தகைய குறளால் மக்களிடையே சமுக ஒற்றுமைக்கு
வழி வகுக்கும். இது தேவை.
(பண்பட்ட ஒருவருக்கு முரண்பட்ட கொள்கைகள் இருக்க முடியாது! எனவே குறட்கள்
அனைத்தையும் ஒருவரே எழுதவில்லை என்பது புலனாகிறது.)
795-அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்.
தவறு செய்தவரை ஒருவர் இடித்து சொல்லும் போது அவர் அழ நேரிடும்,அத்தகைய ஆற்றல்
பெற்றவரையே தேடி நட்பு கொள்ள வேண்டும்.இது தேவை.
796-கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
ஒருவருக்கு கேடு வரும்போது தான் உண்மை நண்பர்களைப்பற்றி அறிந்து கொள்ள
முடியும் அத்தகைய கேட்டிலும் நன்மை உண்டு.அதாவது நண்பர்களை விதம் பிரித்து அறிய
உதவும் கேடு அவருக்கு நல்லதே! இது தேவை .
797-ஊதியம் என்ப தொருவருக்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
அறிவில்லாத ஒருவரின் நட்பை துறப்பது என்பதே அவருக்கு கிடைத்த ஊதியம்.இது தேவை.
அல்லற்கண் ஆற்றறுப்பார்
நட்பு.
நட்டாற்றில் கைவிட்டுவிடும் நட்பை நினைத்துப்பார்க்க கூடாது,நமக்கது உற்சாகத்தை
தராது.இது தேவை.
799-கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
கெட்ட காலத்தில் தம்மை கைவிட்டவரின் நட்பு நாம் சாகும் போது நினைத்தால்
கூட நம் நெஞ்சை சுடும்.இது தேவை.
800-மருவுக மாசாற்றார் கேண்மையொன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
நல்லவரின்(குற்றமற்றவரின்) நட்பை நாடிப்பெற வேண்டும்,ஒத்துவராதவரை விலை
கொடுத்தாவது விலகி விடவேண்டும்.இது தேவை .
‘நட்பராய்தல்’ அதிகாரத்தின் 793 குறளை தவிற மற்ற குறட்கள் கற்க தகுதி வாய்ந்தவை.
No comments:
Post a Comment