Saturday, April 21, 2018

67-வினைதிட்பம்


                       67-வினைத்திட்பம்

661-வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
   மற்றய எல்லாம் பிற.

மன உறுதி இல்லாதவன் செயலிலும் உறுதி இருக்காது.இது தேவை.

662-ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
   ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

இடையூறு வராமல் தடுப்பதும் பின் மீறி வந்தாலும் மனம் தளராமல் இருப்பதே அறிவுடையோர் செயலாகும்.இது தேவை

663
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை;இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.

ஒரு செயலை செய்து முடிக்கும் முன் அதனைப்பற்றி வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லது,அச்செயலின் தன்மை வெளிப்படுத்தினால் நிறைவேற முடியாமல் போகும்.இது தேவை.

664-சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.

மனிதனுக்கு அழகு, சொன்ன சொல்லை காப்பது,சொன்னதை நிறைவேற்றுவது என்பது பலருக்கும் கடினமானதே!இது தேவை.

 665-வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
                                
செயற்கரிய செயல்களை செய்து மாண்டவர் ,அந்த மண்ணின் வேந்தன் கண் படுமானால் மாண்டோரை (மாண்புடையோரை )ஊர்கூட்டி சிறப்பெய்துவர்.இது தேவை.

666-எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
   திண்ணியர் ஆகப் பெறின்.

ஒருவரின் எண்ணங்கள் வலிமை பெற்றதாயின்,அவர் எண்ணங்கள் நிறைவேறுவது உறுதி. இது தேவை .

667-உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ;உருள்பெருந்தேர்க்
   கச்சாணி யன்னார் உடைத்து.

ஒருவருடைய உருவம் பார்த்து எள்ளி நகையாடவேண்டாம்,உருவத்தில் சிரிய பொருளான அச்சாணிதான் ஒரு தேர் ஒடுவதற்கு காரணமாகும்.சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதுதான்   இதன் பொருள்.இது தேவை.

668-கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
   தூக்கங் கடிந்து செயல்.

மன உறுதி நிலைப்பாட்டுடன் துவங்கிய பணிகளை இரவு பகல் பாராமல் செய்து முடிக்க வேண்டும்.இது தேவை.

669-துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
   இன்பம் பயக்கும் விணை.

இன்பம் பயக்குமேயானால் ,அந்த செயலினால் வரக்கூடிய துன்பத்தை தாங்கிக்கொண்டு துணிவுடன் முடிக்க வேண்டும்.இது தேவை.

670-எனைத்திட்ப மெய்திய கண்ணும் வினைத்திட்பம்
   வேண்டாரை வேண்டா துலகு.

எவ்வளவு உடல் பலம் பொருந்தியவராக இருப்பினும் தான் மேற்கொண்ட செயலில் உறுதி இல்லை எனில் உலகம் அவரை விரும்பாது.இது தேவை .

வினைத்திட்பம்அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
                    ************************************************
வேதங்களிலும் சுய சிந்தனைக்கு வழியுண்டு,இதோ அந்த பாடல்-வேத ப்ராமாண்யம் கஸ்ய மிது
         கர்த்ரு வாதஹா ஸ்நானே
         தர்மேச்சா ஜாதிவாத அவலேபஹ
         சந்தா பாரம்பஹா பாபஹானா யசிஇதீ
         ஸத்வஸ்த் பிரக்ஞாநாம் சஞ்சலிங்கானி ஜாம்யே
இது,தர்மபாலர் எழுதிய பிராமண வார்த்திகம்,இதன் பொருள்,
1-எதற்கெடுத்தாலும் வேதம் சொல்வதை நம்புவது
2-ஒருவன் நம்மை படைத்தான்,என அவனையே நம்பிக்கொண்டிருப்பது,
3- குழுவாக ஆற்றில் குளிப்பது,
4-ஒருவன் தலையில் பிறந்தான்,தொடையில் பிறந்தான் என ஜாதி பார்ப்பது
.5-உடலை வருத்தினால் கடவுள் அருளுவார் என தனக்குத்தானே உடலில் காயப்படுத்திக்கொள்வது, இப்படி செய்பவன் மனிதனே அல்ல ஜடம்.இப்படி இந்த ஸ்லோகத்தை ஒரு அர்ச்சகரிடம் தந்து, ‘அர்ச்சனை செய்து தாருங்கள்’ என்றால் ‘ஓ பேஷாக’என்பார்,அவருக்கே அதன் பொருள் புரியாது!-அக்னிஹோத்ரம் சிரி ராமானுஜ தாத்தாச்சாரி.
                            !******************************

No comments: