Monday, April 30, 2018

105-நல் குரவு


                          105-நல் குரவு

1041-இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

இன்மையால்(வறுமையால்) வரும் துன்பம் எது என்றால் வறுமை ஒன்றே!இது உண்மை.

1042-இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.

இம்மை மறுமை என மெய்ப்பியல் தன்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவிப்பதால் இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.

1043-தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குர வென்னும் நசை.

வறுமையின் காரணமாக ஒருவனுக்கு நசை எனும் மன ஆசை உண்டானால் அவன் குடிப்பெருமையை குலைக்கும்.இது தேவை.

1044-இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.

இல்லாமை எனும் கொடுமை நற்குடி பிறந்தாரிடத்தும் இழிந்த சொற்களை சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கிவிடும்.இது தேவை.

1045-நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
       துன்பங்கள் சென்று படும்.

வறுமை எனும் துன்பத்திற்குள் எல்லா வகை துன்பங்களும் அடங்கும்.இது தேவை.

1046-நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.

நல்ல கருத்துக்களை பல தெளிவாக எடுத்து சொன்னாலும் சொல்பவர் ஏழை என்றால் எடுபடாது.இது உண்மைதான்.

1047-அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.

அறமற்ற வறுமை காரணமாக , பெற்ற தாயும் தன் மகனை அன்னியனாகவே பார்ப்பாள்.இது தேவை.

 1048-இன்றும் வருவது கொல்லோ நெருதலும்
     கொன்றது போலும் நிரப்பு.

நேற்றும் என்னை கொன்றது போன்ற வறுமை இன்றும் தொடருமோ என கலக்கம் ஏற்படுத்தும் வறுமை.இது தேவை.

1049-நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பாடு அரிது.

நெருப்புக்குள் கூட தூங்கலாம் ஆனால் வறுமையினால் உண்டாகும் பசியினால் தூங்க முடியாது.இது உண்மை.

1050-துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

முற்றும் துறந்தவர் வாழ்வது பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சிக்கும் கேடு.இது தேவை.

இந்த குறள்,’துறவுஅதிகாரத்தில் துறவரம் பற்றி பெருமையாக கூறும் குறட்களுக்கு முரணாக தெரிகிறது.
                              
ஒரு இடத்தில் ஒரு கொள்கை கோட்பாட்டை பெருமை படுத்தும் புலவர் இன்னொரு இடத்தில் அதே கொள்கை கோட்பாட்டை குறை கூறுவது என்பது கருத்துச் சிதறல் அல்லது கருத்துச் சிதைவு ஆகாதா?
எனவே இருவேறு கருத்துக்கொண்ட புலவர்களின் தொகுப்பே குறள் என்பது புலனாகிறது.

நல்குரவுஅதிகாரத்தின் 1042,-ம் குறளைத்தவிர ஏனைய 9 குறட்களும் பயனுள்ளவை.
     *********************************************************************
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோரை எப்படி அடையாளம் காண்பது?
உங்க நல்ல மனசுக்கு எதுவும் வராது,என சொல்பவர்களிடம்,நீங்க யாருக்கு என்ன தீங்கு செய்தீர்கள் என்பவரிடம்,
நாம் ஒருவருக்கு செய்த நல்ல காரியங்களை,உதவிகளை மற்றவரிடம் சொல்லக்கூடாது என் சொல்பவரிடம்,
உங்களுக்கு செய்த உதவிகளை அவன் என்னிடம் கூறுகின்றான் ,அவனெல்லாம் ஒரு மனுசனா? என நம்மிடம் சொல்லும் நண்பனிடமும்,(இது போன்ற நண்பன் நமக்கு துரோகியாகவே  மாறுவான்)

யாரை நம்புவது?

நம்மை பற்றி பிறரிடம் திட்டிக்கொண்டே இருப்பவரை நம்பலாம்,காரணம் நமது குறைகளை நம்மால் காணமுடியவில்லை,அவனுக்கு மட்டுமே தெரிகிறது!
கடவுள் எனும் கல்லை நம்பாதே உன்னை காலை வாரி விட்டுவிடும்.உன்னை மட்டுமே நம்பு, உன் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்க அது உதவும்,உன்னுள் இருக்கும் மனமே உனக்கு சுகமளிக்கும்  நண்பன்!

                               **************************************

No comments: