Wednesday, April 18, 2018

59-ஒற்றாடல்


                         59-ஒற்றாடல்

581-ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
   தெற்றென்க மன்னவன் கண்.

சிறந்த ஒற்றனும் அறவழி சிந்தனை கொண்ட நூலும் கொண்ட இரண்டும் ,மன்னவனுக்கு இரண்டு கண்கள் போன்றதாகும்.இது தேவை.

582-எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
   வல்லறிதல் வேந்தன் தொழில்.

அனைத்து தரப்பு மக்களையும்  அனைத்து காலங்களிலும் ஒற்றர் மூலம் தெரிந்து செயல் கொள்வது அரசரின் கடமையாகும்.இது தேவை.

583-ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
   கொற்றங் கொளக்கிடந்த தில்.
                                 
ஒற்றர் மூலம் நாட்டு நடப்புகளை பற்றி அறிந்து ஆட்சி செய்யா மன்னவன் கொற்றம் தழைக்க வழியே இல்லை.இது தேவை.

584-வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
      கனைவரையும் ஆராய்தவ தொற்று.

தன் சுற்றம்,வேண்டியவர்,வேண்டார் என பாகுபாடற்ற முறையில் ஒற்று வேலை செய்பவர் தான் நேர்மையான ஒற்றர் எனப்படும்.இது தேவை.

585-கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
   உகாஅமை வல்லதே ஒற்று.

ஐயுறா தோற்றமும்,ஐயுறுபவர்களைக் கண்டு அஞ்சாமல் உறுதியான மனத்துடன் ராஜ ரகசியங்களை காப்பாற்றுபவனே வல்லமையான ஒற்றன்.இது தேவை.

586-துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
   தென்செயினுஞ் சோர்வில் தொற்று.

எத்தனை துன்பம் வந்தாலும் தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒற்று வேலை செய்பவரே சிறந்த ஒற்றர்.இது தேவை.

587-மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
   ஐயப்பா  டில்லாதே ஒற்று.

அரசுக்கு எதிராக மறைத்து செய்யும் காரியங்களை மறைந்திருந்து அறிந்து கொள்வதே சிறந்த ஒற்று.இது தேவை.

588-ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
   ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

தான் ஒற்றறிந்த செய்திகளையும் மற்றோர் ஒற்றன் மூலம் அறிந்து ஒப்பிட்டு அத்தகைய செய்திகளையே அரசுக்கு தெரிவிப்பவன் சிறந்த ஒற்றன்.இது தேவை.

589-ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்.

ஒரு ஒற்றரை மற்றொர் ஒற்றர் அறியாதபடி மூன்று ஒற்றர்கள் மூலம் செய்தி சேகரித்து உண்மை நிலை அறிய வேண்டும்.இது தேவை.
                            
590-சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
   புறப்படுத்தான் ஆகும் மறை.

ஒரு ஒற்றனின் திறமையை வெளிப்படையாக பாராட்டுதல் கூடாது.மறைவன செய்திகளை வெளிப்படுத்தியது போலாகிவிடும்.இது தேவை.

ஒற்றாடல்அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
            **************************************************************
திருமணத்திற்கு முன்னாள் மது வர்கம் எனும் மாப்பிள்ளை  அழைப்பு,மாடு வெட்டி யாகம் நடத்த வேண்டும்,
‘விவாஹே கெளஹி...க்ருஹே கெளஹி...’
முக்கிய விருந்தே கோ மாமிசம் தான் முக்கிய அம்சம்.ஆனால் இன்று மாட்டுக்கு பதில் வாழையை வெட்டுகின்றனர்,காலம் மாறிவிட்டது.
ஆனால் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் இன்னும் வேதம் வகுத்த வழி என உணவுப்ப பொருளையும்(நெய்,அரிசி),பட்டாடைகளையும் யாகம் செய்ய வேண்டும் என தீயிட்டு கொளுத்த நாம் காரணமாகிறோம்,தடுக்க முடியவில்லை,பார்பனர்கள் வகுத்த வேதத்தில் விழுந்து விட்ட வெய்யிலாளிகள்.

இன்றும் திருமண சடங்கில் இந்த கெளஹி..கெளஹி மந்திரங்கள் நின்ற பாடில்லை.தெரிந்த மொழியில் மந்திரம் சொன்னால் என்னாவது?
தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்.
இன்றும் திருமணத்தில் ஓதப்படும் இந்த மந்திரத்தின் பொருளென்ன? தமிழில் சொன்னால் ‘பச்சை’யாக இருக்கும்,இதோ அது ‘தேவதைகளே என் ஆணுறுப்பை பிடித்து இந்த பெண்ணுக்குள் விடுங்கள்...’                
‘விஷ்னுர் யோனி கர்ப்பயது...தாத கர்பந்தாது...’
பெண் இனப்பெருக்க உறுப்பில் வாழும் தெய்வங்கள் கர்பத்தை உண்டாக்க அருள் புரியவேண்டும்...
                       *******************************************

No comments: