Saturday, April 28, 2018

90-பெரியாரைப் பிழையாமை


                  90-பெரியாரைப் பிழையாமை

891-ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
   போற்றலுள் எல்லாம் தலை.

ஆற்றல் மிக்கவர் செய்யும் செயலை இகழாமல் இருப்பதே நாம் அவருக்கு செய்யும் மிகப்பெரிய பாதுகாப்பு. இது தேவை.

892-பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
   பேரா இடும்பை தரும்.

குடும்பத்தில் பெரியவர்களை பாதுகாக்க தவறினால்,பெரியவர்களால் பெரிய துன்பங்கள் வரும்.இது தேவை.

893-கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.

நாம கெட்டு போகவேண்டுமாயின் ,அழிக்க வல்ல சக்தி கொண்ட பகைவரை இழித்துப் பேசினால்  போதும்,நமக்கு இழப்பு நிச்சயம்.இது தேவை.

894-கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
   காற்றாதார் இன்னா செயல்.

ஆற்றல் படைத்தவர்களை ஆற்றல் அற்றவர்கள் எதிர்த்தால் தானே அழிவை தனக்கு கையசைத்து வரவேற்றது போலாகிவிடும்.இது தேவை.
  
 895-யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.

ஆற்றல் மிக்க அரசனின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கு சென்றாலும் உயிர் வாழமுடியாது.இது தேவை.

896-எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
   பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

தீக்காயம் பட்டவர்கள் கூட பிழைத்துக்கொள்ள முடியும்.ஆனால் தவறிழைத்தவர்கள், பெரியவர்களிடம் தப்பிக்கவே முடியாது.இது தேவை .

897-வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.

வகையாக வாழ காற்றுக்கொண்டவர்கள் என்ன சுகங்களை அனுபவித்தாலும்,தகுதி வாய்ந்த பெரியோர் முன் அவையாவும் பயனற்று போகும்.இது தேவை.

898-குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
   நின்றன்னார் மாய்வர் நிலத்து.

மலைபோன்ற ஆற்றல் பெற்ற பெரியவர்களை குலைக்க நினைக்கும் பெரும் செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள்.இது தேவை.

899-ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து 
   வேந்தனும் வேந்து கெடும்.

உயர் சிந்தனையுடைய பெரியவர்கள் சீற்றம் அடைந்தால் மாமன்னனும் சீரழிவான்.இது தேவை .

900-இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
   சிறந்தமைந்த சீரார் செறின்.

ஒருவன், என்னதான் எல்லையற்ற படைபலம் வசதி படைத்திருந்தாலும் சான்றோரின் சீற்றத்திற்கு தப்பிக்க முடியாது.இது தேவை.

பெரியாரைப் பிழையாமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
       *************************************************************
ஒன்பது கிரகங்களின் இயக்கம் நம் வாழ்வை தீர்மானிக்கும் என்றால்,சில கிரகங்கள் கண்டுபிடிக்ப்படாத காலங்களில் உருவாக்க்பட்ட சோதிடம் எப்படிச் சரியாகும்?
அப்படிப்பட்ட சோதிடத்தை கணித்து எண்ணற்றோரின் வாழ்வை பாழடிப்பது குற்ற செயல் அல்லவா?

இதிலே செவ்வாய் தோஷம் வேறு ,செவ்வாய் தோஷத்தை சொல்லி எத்தனை பெண்களின் வாழ்வு பாழாக்கப்படுகிறது?
இத்தகைய குற்றம் புரியும் சோதிடர்களை தண்டிக்க சட்டம் இயற்ற வேண்டும்!

பகுத்தறிவு சமுதாயம் உருவாக இதுவே சரியான நடவடிக்கை.எந்த ஆட்சியாளன் இத்தகைய துணிச்சலான காரியம் செய்வான்?
        *****************************************************

No comments: