Saturday, April 7, 2018

46-சிற்றினம் சேராமை


                         46-சிற்றினம் சேராமை

451-சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
   சுற்றுமாச் சூழ்ந்து விடும்.

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்.சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக கருதி தழுவிக்கொள்ளும்.

இங்குதான் சாதியம் உருவாகியது!

இந்த குறளெழுதிய புலவர் பெரியோர் யார்? அவருக்கு பெரியோர் என எப்படி பேர்வந்தது?,சிறுமை குணம் படைத்தவர்களை தீண்டாமல் ஏன் ஒதுக்கினர்?,அப்படி செயல்பட்டவர்களை  மேல்சாதி என புலவர்கள் ஏன் அழைத்தனர்?,பாடல்களை பாடினர். இதுவே சாதிகள் தோன்றக் காரணங்களாக மாறின.தமிழ்ப் புலவர்களே இதற்கு காரணம்.

தன் சுற்றங்கள் சூழ வாழ்வது சிற்றினத்தின் இயல்பு. அவர்களையே  கீழ்சாதி என அழைக்கப்பட்டனர்.

இந்தக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.இது தடை செய்யப்படவேண்டிய குறள்.

452-நிலத்தியல்பான் நீர்த்திரிந் தற்றாகும் மாந்தர்க்
   கினத்தியல்ப தாகும் அறிவு.

மழை நீர் நடுநிலைத்தன்மை உடையது.அதாவது அதற்கு நிறம்,சுவை இல்லை.ஆனால் அது மண்ணில் விழும்போது அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப சுவை,மற்றும் நிறம் மாறுபடும்.அதுபோல மனிதர்கள் மொத்தம் ஐந்துவகையான குணம் படைத்தவர்கள்.
 எல்லா மனிதர்களும் இந்த ஐந்துவகை குணங்களில் அடங்கி விடுவது போல்,பிறக்கும் அத்துனைபேரும் அந்தந்த இனத்தின்  குணங்களைச் பெற்றிருப்பர்.

பாமர மனிதர்களுக்கு அருவ சிந்தனை யூட்ட உருவகம்,மற்றும் உவமேயம் காட்டி  புரியவைப்பது படித்த அய்யோக்கியர்களின் வேலை.மனிதர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்தால் ஏமாற்றி பிழைப்பது சுலப மாகிவிடும்.ஜாதகம் கணித்தல்,நட்சத்திரம்,நாள் பார்த்து பஞ்சாங்கம் கணித்தல் என்பெதல்லாம் பிழைப்புக்காக!

இதுவும் சாதியங்களைப்பற்றி பேசுவது போல் தோன்றினாலும்.இந்த நிறப்பிரிகை மனிதர்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
                                 
453-மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
      இன்னா னெனப்படுஞ் சொல்.

மனிதர்களின் உணர்ச்சி மனதைப்பொருத்து அமைந்தாலும்,அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் தன்மையை சார்ந்தே இருக்கும்.

454-மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
      கினத்துள தாகும் அறிவு.

ஒருவரின் அறிவு திறன் அவர் மனத்தளவே இருந்தாலும், அவர்சார்ந்த இனத்தின் தொடர்பால் வெளிப்படும்.இதுவும் சாதிய வேறுபாடுகளை  பகரும் பாடல்தான்.

455-மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
      இனத்தூய்மை தூவா வரும்.

ஒருவன் மனம் தூய்மையாகவும் அவன் செயல்களும் தூய்மையானதாகவும் இருக்கும்,இருப்பினும் அவையாவும் அவன் இனம் சார்ந்தே அமையும்.
                                 
456-மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
   கில்லைநன் றாகா வினை. 

மனத்தூய்மையால் புகழ் வந்தடைந்தாலும் அவை அவர்கள் சார்ந்த இனத்தின் பால் நற் செயல்கள் விளையும்.

457-மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
   எல்லாப் புகழுந் தரும்.

மன நலம் மிக்க சான்றோராக இருப்பினும்,இவர் சார்ந்த இனத்தின் புகழே வெளிப்படும்.
                              
458-மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
   கினநலம் ஏமாப் புடைத்து.

எப்படிப்பட்ட மன வலிமை பெற்றவராயினும்,அவர் சார்ந்துள்ள இனத்தைப் பொருத்தே அவருக்கு அந்த மன வலிமை அமையும்.

459-மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
   இனநலத்தி னேமாப் புடைத்து.

மன நலத்தினால் ஒருவருக்கு மறுமையிலும் இன்பம் வரக்கூடும்.அதுகூட அவர் சார்ந்த இனத்தால் மட்டுமே அமையும்.இது மெய்ப்பொருள் தத்துவத்திற்கு மாறானது.

460-நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
   அல்லற் படுப்பதூஉ மில்.  

நல்லினத்தின் துணையால் சமுகத்திற்கு நலன் பெருகும்,துன்பம் தரக்கூடியது, தீய இனம்.
நல்ல மனம் படைத்த கல்வியாளர்கள் ,சமுகத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் மக்களை நல்வழிப்படுத்துவதில் சோர் வடைய மாட்டார்கள்.சிற்றினம்(தீய இனம்).பேரினம் என வேறுபடுத்தி ஊரை இரண்டாக்க மாட்டார்கள்.மக்களை சாபமிடுவது போல், மேல் மக்கள் மேல் மக்களே,கீழ்மக்கள் கீழ்மக்களே-இவர்களை திருத்த முடியாது என பாடி வைக்க மாட்டார்கள்.

சிற்றினம் சேராமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் மக்களை வேறுபடுத்தி காட்டுகிறது.  இக்கால சூழலுக்கு ஒத்து வராது,எனவே இந்த பத்து குறட்களையும் படிக்க தகுதியற்றது எனக் கூறி தடை செய்யப்படவேண்டும் .
                             **************************************
                      
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒது(ங்)க்கும்! சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக கருதி தழுவிக்கொள்ளும்!
இந்த குறளை நமக்கு சொல்லித் தந்த தமிழாசிரியர்கள் மிக பக்குவமாக சொல்லியிருப்பார்கள்.சிற்றினம்-கீழ் சாதி எனும் பொருள் தரும் வார்த்தைகளை தவிர்ப்பார்கள்.
காரணம்,வகுப்பில் கீழின மாணவர்கள் கலந்திருப்பார்கள்.இதை விரிவாக சொன்னால் சமுக ஒற்றுமை பாதிக்கும் எனும் அரசின் கருத்தாக உள்ளதால்தான்!
இங்குதான் சாதியம் உருவாகியது!இந்த குறள் பாடிய-எழுதிய பெரியோர் என பேர் எப்படி வந்தது?சிறுமை குணம்படைத்தவர்களை தீண்டாமல் ஒதுக்கினர்,சிற்றின மக்களை தீண்டாதவர்களை மேல் சாதியினர் என அழைத்தனர்.சங்க இலக்கியங்களில்(வர்ணாசிரம காலங்களில்)இவ்வினத்தை திருத்த முடியாது எனும் கோணத்தில் பாடியிருப்பர்.தன் சுற்றங்கள் சூழ வாழ்வது சிற்றினத்தின் இயல்பு.இது போன்ற பொருள் தரும் பாடல்கள் மற்ற இலக்கியங்களிலும்  வருகிறது.
தமிழ் மீது ஆர்வமும்,ஆன்மிகத்தின் மீது பற்று கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள், இதுபோன்ற குறட்களை தடை செய்ய கோரவில்லை போலும்! பண்பட்ட குணங்கள் அமையா மனிதர்களை சிற்றினத்தவர் என வகைப்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என அசிங்கப்படுத்திவிட்டனர் பெரியோர் அல்ல சிறியோர்! 
  
                 **************************************

No comments: