Tuesday, April 17, 2018

56-கொடுங்கோன்மை


                       56-கொடுங்கோன்மை

551-கொலைமேற் கொண் டாரிற் கொடிதே
அலை மேற் கொண்டு.

கொலையையே தொழிலாக கொண்ட ஒருவனை விட குடிகளுக்கு  தொல்லை கொடுக்கும் அரசன் மிகக் கொடியவன்.இது தேவை.

552-வேலொடு நின்றான் இடுவன் றதுபோலும்
   கோலொடு நின்றான் இரவு.

இரவு நேரத்தில் வழியில் நின்று கொண்டு வேலொடு வழிபறி செய்யும் கொடியவனை விட கொடியவன் தன் மக்களிடம் வன்முறை கொண்டு  வரிவசுல் செய்யும் மன்னவன்.இது தேவை .

553-நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
   நாடொறும் நாடும் கெடும்.

நாள் தோறும் தன் மக்களின் குறைகளை ஆராய்ந்து களையாத அரசன் நாளொறு மேனியாக நாடு கெடும்.இது தேவை

554-கூழும் குடியும் ஒருங் கிழக்கும் கோல்கோடிச்
   சூழாது செய்யும் அரசு.

உணவையும்(கூழ்) மக்களையும் ஒருங்கிணைத்து கோலோச்சாத மன்னவன் அரசு தானாக அழியும் .இது தேவை .

 555-அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றோ
    செல்வத்தை தேய்க்கும் படை.

ஒரு கொடுங்கோல் மன்னவன் ஆட்சியில் குடிமக்களின் சிந்தும் கண்ணீர் அவன் ஆட்சியை அழிக்கும்.இது தேவை.
                                                
556-மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
   மன்னாவாம் மன்னர்க் கொளி.

செங்கோல் ஆட்சி முறைதான் மன்னர்க்கு புகழ் சேர்க்கும்.அஃதில்லையேல் புகழ் நிலைக்காது.இது தேவை. 

557-துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன்
   அளியின்மை வாழும் உயிர்க்கு.

(மழைத்)துளி இல்லா உலகம் துன்ப படும்.அது போல மன்னன் அருளில்லா குடிமக்கள் அவதிபடுவார்கள்.இது தேவை.

558-இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
   மன்னவன் கோற்கீழ்ப் படின்.

வறுமையற்ற மக்கள் கூட முறையற்ற மன்னவன் ஆட்சியில் துன்புறுவர்.இது தேவை.

559-முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.

முறையற்ற மன்னவன் ஆட்சியில் முறையாக பெய்யும் மழையும் பொய்த்து போகும்.இது தேவையற்றது.
ஒரு அரசனின் முறையற்ற ஆட்சிக்கும் வான் மழை பொய்த்துப் போவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.இது மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது.இது மாணவர்கள் கற்க தகுதியற்றது.

செங்கோண்மைஅதிகாரத்தின் 545-ம் குறளில் பருவ மழை பொய்த்துவிடாமல் இருக்க மன்னனின் செங்கோண்மை ஆட்சிதான் காரணம் எனக் கூறும் அதே வள்ளுவரா கொடுங்கோண்மைஅதிகாரத்தின் 559-ம் குறளான முறையற்ற மன்னவன் ஆட்சியில் வான் பொய்த்துவிடும் எனப் பாடியிருப்பார்?

560-ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.

முறையற்ற,பாதுகாப்பற்ற மன்னவன் ஆட்சியில், பசுக்களும் பராமரிக்கப்படாமல் போக்க்கூடும் அதன் பலனாக அந்தணர்களும் அறம் காக்கும் குலத் தொழிலையும்  மறப்பர்.

அந்தணர்களை வாழவைப்பதும் அதன் விளைவாக  பசுக்களை பராமரிப்பதும் ஒரு அரசனின் தலையாய கடமையாக அந்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும் வெய்யிலாளி வர்க்கம் அதனை புனித தொழிலாக கருதி செய்கிறது.

 மிகச்சிறந்த அசைவ உணவுப் பிரியர்களான பிராமணர்களின் தேவைகளை  (பாலும் நெய்யும்) பூர்த்தி செய்யப்படவேண்டியது ஒரு அரசனின் கடமையாக அந்நாளிலிருந்து (மகாபாரத காலத்திலிருந்து) கருதியதால் பசுவின் மற்ற கழிவுகளான சாணம் மற்றும் சிறுநீர்(கோமியம்) இவைகளை வெய்யிலாளிகளின் புனிதமாக்கினார்கள்,சாணத்தை எரித்து நெற்றியில் இட சொன்னார்கள்,அதற்கு பின்னாளில் அறிவியல் காரணம் தேடினார்கள்.

உலகில் மற்ற மத மக்கள் (உலக மக்கள் தொகையில் 7-ல் 6 பகுதி மற்ற மத மக்கள்தான்)எல்லாம் நெற்றியில் திருநீரு இடுவதில்லையே ,அவர்கள் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளை அதிகம் கண்டுபிடிக்கின்றர், நெற்றியில் திருநீரு இட்டவருக்கும் கோமியத்தை வீட்டில் தெளித்தவர்களுக்கும் நோய் தொற்றுவதில்லயா? என யாரும் நம்மவர்கள் கேள்வி கேட்டதில்லை,இன்றும் கேட்பதில்லை.அத்தகைய வினாக்களுக்கு விடையளிக்க யாரும் முன்வருவதில்லை,ஏன்?

செங்கோன்மை அதிகாரத்தின்   559 மற்றும் 560 ஆகிய இரண்டு குறட்களும் இக்கால சூழலுக்கு மாணவர்கள் கற்க தகுதியற்றது .மற்ற 8 குறட்களும் பயனுள்ளவை.   
                        
                            

No comments: