Thursday, April 12, 2018

52-தெரிந்து வினையாடல்


                           52-தெரிந்து வினையாடல்

511-நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
   தன்மையான் ஆளப் படும்.

நன்மை தீமைகளை ஆராய்ந்து நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை செய்யவும் தகுதி பெற்றவர்கள்.இது தேவை.

512-வாரிப் பெருக்கி வளம்படுத் துற்றவை
   ஆராய்வான் செய்க வினை.

வளம் பெருக்க ,இடையூறுகளை  நீக்க வல்லவனே செயலாற்றும் திறனுடையவன். இது தேவை .

513-அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
   நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு,அறிவு,தெளிவு,ஆசையின்மை ஆகிய நான்கு குணங்களையும் பெற்ற பண்பாளரை தேர்வு செய்வதே நலம்.இது தேவை.

514-எனைவகையான்தேறியக் கண்ணும்வினைவகையான்
   வேறாகும் மாந்தர் பலர்.

எத்தனை வழிமுறைகளை பின்பற்றி ஒருவரை தேர்ந்து எடுத்தாலும்,அவர் செயல்படும் போது பலர் மாறுபடுவர்.இது தேவை.

 515-அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதன்
   சிறந்தானென் றேவற்பாற் றன்று.

ஆற்றல் உள்ளவரை அறியாமல் ,வேறொருவரை சிறந்தவர் என கருதி அவரிடம் பொறுப்பு ஒப்படைக்க கூடாது.இது தேவை.
                               
516-செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
   டெய்த உணர்ந்து செயல்.

ஒரு செயல் செய்யக்கூடியவனை நாடி அவன் செயலாற்றும் செயலின் தன்மையை உணர்ந்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.இது தேவை.

517-இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
   ததனை அவன்கண் விடல்.

ஒரு காரியத்தை முடிக்கும் திறமை யாரிடம் உள்ளதோ அவரிடம் ஆய்ந்தறிந்து அதை ஒப்படைக்க வேண்டும்.இது தேவை.

518-வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
   அதற்குரிய னாகச் செயல்.

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்த பிறகே அவனை அந்த செயலில் ஈடுபடுத்த வேண்டும்.இது தேவை.

519-வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
   நினைப்பானை நீங்குந் திரு.

வெற்றிகரமாக  செயலை முடிக்கும் திறமை உடையவனின் உறவை தவறாக நினைப்பவரின் செல்வம்  அவரை விட்டு அகலும்.இது தேவை.

520-நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
   கோடமை கோடா துலகு.

உழைப்பவர்களை அந்நாட்டு மன்னன் உற்சாகப்படுத்த வேண்டும்.உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்து ஆவன செய்ய வேண்டும்.இது தேவை.
தெரிந்து வினையாடல்அதிகாரத்தின் பத்துக்  குறட்களும் பயன் உள்ளவை.
                           

No comments: