85-புல்லறிவாண்மை
841-அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
அறிவின்மை என்பது துன்பத்திலும் துன்பம் விளைவிக்க
கூடியது,மற்ற வகை
பஞ்சங்களை கூட உலகம் பொருட்படுத்தாது.இது தேவை.
842-அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
அறிவில்லாதவன் தானம் செய்கின்றான் எனில் அதை
பெறுவதற்கு ஒருவன் தவம் செய்திருக்க வேண்டும்.
அப்பொழுது, அறிவாளி தானம் செய்ய மாட்டான் என பொருள் கொள்வதா?
இங்கே கருத்து முரண் படுவது போல்
தோன்றுகிறது.இருப்பினும் தானத்தை பெறுவதற்கு
தவம் அவசியம் என்பது போல் பொருள் கொண்டால் இது மெய்ப்பியல் தன்மைக்கு
மாறானது.எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
843-அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல்
அரிது.
அறிவில்லாதவர் துன்ப வாழ்க்கை வாழ்பவர் ஆவர்,அத்தகைய துன்பத்தை அவருடைய
பகைவர்கள் கூட அந்த அறிவில்லாவர்க்கு வழங்கமாட்டார்.
மனம் தான் மானிதனின் மகிழ்ச்சியை நிர்னயிக்கிறது.இது தேவை.
844-வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்மையாம் என்னும்
செருக்கு.
ஒருவன் தன்னைத்தானே அறிவாளி என தீர்மானிக்கும் எண்ணம்
கொண்டவன் திமிர்(செறுக்கு) கொண்டவன்.அடக்கம் வேண்டும் என்பதே இதன் பொருள்.இது தேவை.
845-கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லாதூஉம் ஐயம் தரும்.
கல்லாத ஒருவன் கசடற நூலை கற்றது போல் நடந்து கொண்டால் மற்றவர்களுக்கு அவன் மேல் ஐயம்
உண்டாகும்.
இது தேவை.
846-அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
தாம் செய்த குற்றத்தை உணராமல் ஒரு புல்லறிவாளன், உடலை மறைக்க உடையணிந்து போவது
போல் ஆகும்.இது தேவை.
847-அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமறை தானே தனக்கு.
மறைபொருளை(நன்னடத்தை) மனதில் வைத்து நடக்காதவன்
தனக்குதானே தீங்கிழைத்து கொள்வது போலாகும்.இது தேவை.
848-ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
தான் தேறான்-சுய சிந்தனை இல்லாதான் ,பிறர் சொல் கேளான், எந்நாளும் துன்ப கதியில்
வாழ்வான். இது தேவை .
849-காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
அறிவற்றவன் தான் கண்டதே கோலம் என்பான்,அவனே தன்னை அறிவற்ற நிலைக்கு
ஆளாக்கிக்கொள்வான்.இது தேவை.
850-உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.
உலகத்தார் உண்டென்பதை மறுக்கும் ஒருவன் பேய் போன்றவன்
எனப்படுவான்.
கடவுளையும் காணமுடியாது,பேயையும் காணமுடியாது. உலக மக்கள் கடவுள் இருக்கின்றார்
என்பார்கள்.அதை ஒருவன் மறுத்தால் மறுப்பவனை பேய் போன்றவன் என்பதா?உலகமக்களால் நிறுபிக்க முடியாத
வைகளை ஒருவன் நம்ப வேண்டும் என வற்புறுத்துவது எத்தகைய நியாயம்?
பேய்(அலகை),என்பது
மெய்பியல் தன்மைக்கு மாறானது,உருப்பொருள்
தத்துவத்திற்கு உடன் படாதது. இரண்டையும் (கடவுள்,பேய்) மறுப்பதில் தப்பில்லை. எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
‘புல்லறிவாண்மை’ அதிகாரத்தின் 842,850 ஆகிய இரண்டு குறட்களைத் தவிர மற்ற எட்டு குறட்களும்
கற்க தகுதி வாய்ந்தது.
No comments:
Post a Comment