Friday, April 27, 2018

89-உட்பகை


                            89-உட்பகை

881-நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
   இன்னாவாம் இன்னா செயின்.

நிழலும் நீரும் மனிதர்களுக்கு நோய் தரக்கூடியதாக பின்னாளில் மாறும்,அதுபோல உறவினர் நல்லவர்போல் தோன்றினாலும் பின்னாளில் நமக்கு துன்பம் தரக்கூடிய உட்பகை அளிப்பர்.இது தேவை.

882-வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
   கேள்போல் பகைவர் தொடர்பு.

கொடுவாளைப்போல் தோன்றும் பகைவரைவிட ,உறவாடி கெடுக்க நினைப்பவரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.இது தேவை.

883-உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
   மட்பகையின் மாணத் தெறும்.

உட்பகைக்கு அஞ்சி தன்னை ஒருவன் காக்க தவறினால்,குயவன் மட்பாண்டத்தை  அறுக்கும் கருவி போல், உட்பகை அழிவு ஏற்படுத்தும்.இது தேவை.

884-மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
   ஏதம் பலவும் தரும்.

வெளித் தோற்றத்தில் நண்பர் போல் தோற்றமளித்து உட்பகை கொண்ட ஒருவரின் நட்பு,அவனைச் சார்ந்தவர்களையே பகைவராக்கும் கேடினைத் தரும்.இது தேவை.

885-உறல்முறையான்உட்பகை தோன்றின்இறல்முறையான்
   ஏதம் பலவும் தரும்.

உட்பகை கொண்ட உறவுகளாலேயே ஒருவனுக்கு இறத்தல் போன்று கேடுவிளைவிக்க கூடிய பல துன்பங்களை தரும்.இது தேவை.

886-ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்சான்றும்
   பொன்றாமை ஒன்றல் அரிது.

ஒற்றுமையாக இருந்தவரிடையே உட்பகை தோன்றினால் அதனால் ஏற்படும் அழிவை தடுக்கவே முடியாது.இது தேவை

887-செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
   உட்பகை உற்ற குடி.

செப்புச் சிமிழ் புறத்தே மூடியிருப்பது போல் தோற்றமளிக்கும், ஆனால் உட்புறம் பொறுந்தாது, அதுபோல் உட்பகை கொண்டவர்கள் ஒட்டி உறவாடுவர்.
இது தேவை.

888-அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
   துட்பகை உற்ற குடி.

அரத்தினால் தேய்க்கப்படும் பொன்போல உட்பகை கொண்ட குலத்தின் வலிமையும் குறைந்து தேயும்.இது தேவை .

889-எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
   உட்பகை உள்ளதாங் கேடு.

பகை என்பது எள்ளின் பிளவு போல் சிறியதாக தோற்றமளித்தாலும், உட்பகையால் வரும் பிளவு பெருங்கேடு விளைவிக்கும்.இது தேவை.

890-உடம்பா டில்லாதவர் வாழ்க்கை குடங்கருள்
   பாம்போ டுடனுறைந் தற்று.

குடத்தினுள் பாம்போடு வாழும் உயிரினத்தைப் போன்றது,உட்பகை கொண்ட உறவினருடன் வாழ்வது.இது தேவை.

உட்பகைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
          ******************************************************************************************************
சோதிடம் கிரகங்கள் இயக்கத்தை  அடிப்படையாக கொண்டது.இடம் பெயரும்போது வாழ்வு மாறும் என்கின்றனர்.இவற்றுள் சூரியனையும்  சேர்த்து ,சூரியன் இடம் பெயர்வதாக சோதிடம் கணிக்கின்றனர்.

நிலையாக உள்ள சூரியன் இடம் பெயர்வதாக தவறாக் கருதிக்கொண்டு சோதிடம் கணிக்கப்படுகிறது, அடிப்படையே தவறு எனும் போது,சோதிடம் எவ்வாறு உண்மையாகும்.

அதுமட்டுமல்ல சூரியன் ஒரு கோளுமல்ல,அது ஒரு நட்சத்திரம்,நட்சத்திரத்தை கோளாக நினைத்து சோதிடம் கணிப்பதே அறியாமையின் அடையாளம்.
அப்படியாயின் தவறானது எப்படி  சரியாகும்? என்பதை சிந்திக்க வேண்டாமா?  
                     **************************************    

No comments: