99-சான்றாண்மை
981-கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள்
பவர்க்கு.
செய்யத்தக்க கடமை இவை என மேற்கொள்பவருக்கு நல்லவை
எல்லாம் இயல்பான கடமை.இது தேவை
982-குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று.
பிறர் நலம் நாடும் நற்குணங்களே சான்றோருக்கு அழகு,
இது தேவை.
983-அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.
அன்பு,நாணம்,உலக ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை இவை ஐந்தும் சான்றாண்மையை
தாங்கும் தூண்கள்.இது தேவை.
984-கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
கொல்லாமை என்பது சிறந்த நோன்பு,பிறர் செய்த தீமைகளை வெளியில்
சொல்லாத குணம் சிறந்த சான்றோர் பண்பு.இது தேவை.
985-ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
பணிந்து போதலே ஆற்றல் மிக்க போக்கு,அது பகைமையை மாற்றுகின்ற படையாக
சான்றோர்க்கு அமையும்.இது தேவை.
986-சால்பிற்கு கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
பொன்னின் அளவறியும் உரைகல் போல் எது வெனில் தனக்கு
ஒப்பில்லா தாழ்ந்தோரிடத்தும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் பண்பாகும்.இது தேவை.
987-இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தோ சால்பு.
தனக்கு தீமை செய்தார்க்கும் இனியவை செய்யாத
சான்றோர்க்கு சான்றாண்மை எனும் பண்பு இருந்து என்ன பயன்?இது தேவை
988-இன்மை ஒருவர்க் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெரின்.
ஒருவருக்கு சான்றாண்மை எனும் திண்மை இருக்குமானால்
வறுமை என்பது இழிவானதல்ல.இது தேவை.
989-ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்.
கடமை தவறா சான்றோர் ஊழிக்காலத்தில் கடல் புரண்டாலும்
தம்நிலை மாறா கடலைப்போல் திகழ்வர்.இது தேவை.
990-சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநில்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றோரின் நற்பண்பு குறையுமானால் இவ்வுலகம்
பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.இது தேவை.
‘சான்றாண்மை’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment