102-நாணுடைமை
1011-கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
ஒருவன் தகாத செயலுக்கு நாணுவதே நாணமாகும்.ஆனால்
பெண்கள் நாணுவது வேறுவகையானது.இது தேவை.
1012-ஊணுடை எச்சம் உயிர்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
உணவும் உடையும் எல்லா மாந்தர்க்கும் பொது ஆனால் நாணம்
மட்டுமே நல்லவர்க்கு சிறப்பு.இது தேவை.
1013-ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
எல்லா உயிர்க்கும் ஊனாலாகிய உடம்புதான்.ஆனால் சால்பு
எனும் நாணம் கொண்டவர்கள் நற்பண்பை இருப்பிடமாக கொண்டவர்கள்.இது தேவை.
1014-அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
சான்றோர்க்கு நாணமே அணிகலன் ,அது இல்லை எனில் பெருமிதமாக நடை
போடுவது என்பது பிணியே.இது தேவை.
1015-பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
பிறருக்கு வரும் பழிக்காகவும்,தனக்கு வரும் பழிக்காகவும்
நாணுகின்றவர் ,நாணத்தின்
உறைவிடம் ஆவர் .இது தேவை.
1016-நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
உயர்ந்தோர் தனக்கு பாதுகாப்பாக நாணமெனும் வேலியை
கொள்வாரேயால்லாமல் மேலோர் வாழும் உலகை விரும்ப மாட்டார். இது தேவை.
1017-நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
உயிரா நாணமா எனும் நெருக்கடி வரும்போது நாணத்திற்காக
உயிரையும் விடுவர் பண்பாளர்.இது தேவை.
1018-பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
பிறர் நாணத்தக்கதை கண்டு தான் நாணாமல் இருந்தால் அறம்
நாணி அவரை கைவிடும்.இது தேவை.
1019-குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலச்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
ஒருவன் ஓழுக்கம் கெட்டால் அவன் குலம் கெடும்,அவன் நாணம் இல்லாது நின்றால் அவன்
நலம் கெடும்.இது தேவை.
1020-நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
கயிறு கட்டி ஆட்டுவதால் உயிர் இருப்பது போல் தோன்றும்
மரப் பொம்மைக்கு ஒப்பாகும் நாணமில்லாதவர்
வாழ்க்கை.இது தேவை.
‘நாணுடைமை’ எனும் அதிகாரத்தின் பத்துக்
குறட்களும் பயனுள்ளவை.
அறிவு என்பது என்ன?
***************************************************************
***************************************************************
அறிவு என்பது பல் முனைகளிலிருந்து, பலரிடமிருந்து, பலவகையில்,பல நேரங்களில் நமக்கு
வந்து சேர்வது!
பிறர் சொல்வதை,முன்னோர்கள் கடைபிடித்த சடங்குகளை ,சம்பரதாயங்களை பின்பற்றுதல்
இதில் உண்மையும் மெய்ப்பியல் தன்மையும் உள்ளதா என்பதை தன் சுய அறிவு கொண்டு
அலசுவதே அறிவு.
நாம் பின்பற்றும் வாழ்க்கை நடைமுறை விஷயங்கள்,பிறருக்கோ,சக மனிதர்களுக்கோ
தீங்கு விளைவிக்காத நிகழ்ச்சிகளாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்!
நமக்கு மட்டுமே ஆதாயம் கிடைத்தால் போதும் எனும் மனோ நிலை நம் சக
மனிதர்களுக்கு மன நிலை பாதிப்பு ஏற்படுத்தும். ஆன்மிக சிந்தனையில் சொல்லப்போனால்
இது ஒருவகை ‘தோஷம்’(தவறு)இதற்கு பரிகாரம் என்பது தன்னை திருத்திக்கொண்டு ,பாதிக்கப்பட்டவரிடம்
மனம் வருந்துவது,அல்லது மன்னிப்பு கேட்பது.இது ஒரு சிறந்த வாழ்க்கை நடைமுறை.
சுய சிந்தனை தூண்டும் பகுத்தறியும் நூல்களை படிக்க மாட்டேன்,படிக்க விருப்பமில்லை
எனும் மனப்போக்கு கொண்டவர்கள் மேலும் வாழ்க்கையில் துன்ப பட்டுக்கொண்டே
இருப்பர்.இதற்கு பரிகாரம்,பல நூல்களை தெரிவு செய்து படிப்பதே!
**************************************
No comments:
Post a Comment