82- தீ நட்பு.
811-பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
அன்பால் உருகுவது போல் நடிப்பர்,அத்தகைய பண்பிலார் நட்பை
குறைத்துக் கொள்வது நல்லது.இது தேவை.
812-உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
தமக்கு ஆதாயம் வேண்டி நட்பு கொள்வதும் இல்லையெனில்
பிரிந்து செல்வதும் போன்றோரின் நட்பு இருந்தாலென்ன,? இழந்தாலென்ன?
.இது தேவை
813-உருவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
இவரின் நட்பால் நமக்கு என்ன ஆதாயம் என நினைப்பாரும், பணத்துக்கு படுக்கும் விலைமகளும், திருடர்களும் ஒருவருக்கொருவர் சம
மானவர்களே.இது தேவை.
814-அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
போர்க்களத்தில் தம்மை கீழே தள்ளிவிட்டு ஓடும் குதிரையைப்
போன்றோரின் நட்பை பெறுவது காட்டிலும் தனித்து இருப்பதே மேல்.இது தேவை.
815-செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
நாம் பல நன்மைகள் செய்த போதிலும் நமக்கு பாதுகாப்பா
இல்லாத நட்பு இருந்தாலென்ன? இல்லாவிட்டால்
என்ன?இது தேவை.
816-பேதை பெருங்கொழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
அறிவில்லாதவரின் நட்பை விட அறிவுடையோரின் பகை
நல்லது.இது தேவை .
817-நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தெடுத்த கோடி உறும்.
சிரித்து,சிரித்து
பழகும் நண்பரை விட,பகைவரால்
வருவன பத்து கோடிக்கு சமம்.இது தேவை.இது தேவை.
818-ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோரவிடல்
நிறைவேற்றக் கூடிய செயலை தடுப்போரின் நட்பை,அவருக்கு தெரியாமலே
முறித்துக்கொள்வது நல்லது.இது தேவை
819-கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
சொல்வேறு செயல்வேறாக உள்ளோரின் நட்பு நம் கனவிலும்
துன்பம் தொடரும்.இது தேவை
820-எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
நாம் தனிமையில் வீட்டில் இருக்கும் போது ஒருவர்,இனிக்க இனிக்க பேசிவிட்டு பலர்
முன்னிலையில் அவர் நம்மை பழித்துக்கூறும் நட்பை விலகி இருப்பது நல்லது.இது தேவை.
‘தீ நட்பு’ அதிகாரத்தின் பத்து குறட்களும்
பயனுள்ளவை.
***********************************************
‘குடியரசு’எனும் புரட்சி ஏட்டில் (26.11.33) தந்தை பெரியாரை ஆசிரியராக கொண்டு வந்த
முதல் பிரகடணம் இதோ,
மதமே மனிதனிடைய சுயமரியாதைக்கு விரோதி,
மதமே மனிதனின் சுதந்திரத்திற்கு விரோதி,
மதமே மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு விரோதி,
மதமே மனித சமுக சமத்துவத்திற்கு விரோதி,
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை
மதமே முதாலாளி வர்கத்திற்கு காவல்,
மதமே சோம்ப்பேரி வாழ்க்கைக்கு ஆதரவு
மதமே உழைப்பவனை தரித்திரத்தில் ஆழ்த்தி; உழைக்காதவனை உச்சத்தில் வைக்க
உதவுகிறது......
சகல முதலாளி வர்க்கமும் ,சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும்
சுயமரியாதையுடன்... சமத்துவமாய் வாழ வழி செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே ,
‘புரட்சி’
தோன்றியுருக்கிறது,என பெரியார்
தெரிவித்தார்.
(உண்மை-நவ 16-30,2016)
**************************************
No comments:
Post a Comment