Wednesday, April 18, 2018

60-ஊக்கம் உடைமை


                      60-ஊக்கம் உடைமை

591-உடையர் எனப்படுவ தூக்கமஃதில்லார்
   உடைய துடையரோ மற்று.

முயற்சியடையவர் எல்லாம் எதையும் எளிதில் அடைந்துவிடுவர்,ஊக்கமற்றவருக்கு எதையும் அடையும் உரிமையற்றவர்.இது தேவை.

592-உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
   நில்லாது நீங்கி விடும்.

உள்ளத்தில் ஊக்கம் கொண்டவர்கள் தவிர வேறு எதையும் நிலையானவை என கூற முடியாது.இதுதேவை

593-ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்.

ஆக்கத்தை(செல்வம்) இழந்தாலும் ஊக்கத்தை இழக்க கூடாது.இது தேவை.

594-ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.

தொடர் ஊக்கமுடையார் இடம், ஆக்கம்(செல்வம்) போய்ச்சேரும்.இது தேவை.

595-வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
   உள்ளத் தனைய துயர்வு.

தண்ணீரின் அளவே தாமரை நிற்கும்,அதுபோல ஒருவன் வாழ்வில் அவன் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவு கொண்டே  அவன் உயர்வடைவான்.இது தேவை.
                          
596-உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
   தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

உயர்வான எண்ணங்கள் ஒருவனை உயர்த்தும், உயர்வடையா விட்டாலும் ஊக்கம் நீர்த்து போக கூடாது.இது தேவை .

597-சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.

போர்க்களத்து யானைகள் அம்புகளால் துளைக்கப்பட்டாலும், நிலைகுலையாமல் நிற்கும், அதுபோல ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் தளர மாட்டார்கள்.இது தேவை .
                                
598-உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
   வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பிறருக்கு கொடுக்கும் குணமில்லாதவர் வள்ளல் எனும் பேரை பெற இயலாது.இது தேவை.

599-பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
   வெரூஉம் புலிதாக் குறின்.

பருத்த யானையிடம் உள்ள கூர்மையான தந்தம் இருந்தும் தன்னை தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சும்,உருவத்தைவிட ஊக்கமே வலியது என்பது இதன் பொருள்.இது தேவை .

600-உரமொருவற் குள்ள வெறுக்கையைஃ தில்லார்
      மரமக்க ளாதலே வேறு.
மன உறுதியும் ஊக்கமும் இல்லாதவர்கள் மரங்களுக்கு ஒப்பாவர்.இது தேவை .
ஊக்கம் உடைமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.

No comments: