Sunday, April 15, 2018

55-செங்கோன்மை


                   55-செங்கோன்மை.

541-ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
   தேர்ந்துசெய் வஃதே முறை.

குற்றம் புரிந்தோரை ஆய்வு செய்து நடுநிலையோடு வழங்கப்படுவதே நீதியாகும்.இது தேவை.

542-வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
   கோனாக்கி வாழும் குடி.

வான் மழையை நம்பி வானோக்கி வாழும் தாவரங்களைப்போல,மக்களெல்லாம் நல்ல மன்னவனை நம்பி வாழ்வர்.இது தேவை.

543-அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
   நின்றது மன்னவன் கோல்.

மன்னர்களின் செங்கோலுக்கு (நீதிதுறைக்கு)அறநூல் ஒதும் அந்தணர்களே முதன்மையானவர்கள்.இது தேவை.
ஐவகை குணம்(சாதிகள்) படைத்த மக்களில் (அறிவு,ஆட்சிமை,வியாபாரம்,உழைப்பு மற்றும் சேவகம் முறையே பிராமணர், சத்ரியர்@, செட்டியார், வெய்யிலாளி(சூத்ரா),மற்றும் கடைநிலை குணமான அடிமைத் தொழில்(பஞ்சமர்) மனிதர்கள்) முதன்மை இனங்களே நாட்டு மக்களை வழிநடத்தும் தன்மை கொண்டவர்கள் என அக்கால புலவர்கள் பாடிவைத்த பாடல்கள் தான் இந்த  குறள்,நாலடியார்,நான் மணிக்கடிகை, ஆத்துச்சூடி, கொன்றை வேந்தன்,புறநானூறு,திரிகடுகம் மற்றும் உலகநீதி போன்ற மக்கள் நன்னெறிக்கு வழிகாட்டும் நூல்கள்.
@-கடைசியாக வாழ்ந்த சத்ரியன் துரியோதனனோடு சரிந்தது சத்ரியம்.
                                                         
544-குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
   அடிதழீஇ நிற்கும் உலகு.

குடிமக்களை அரவணைத்து,கோலோச்சும் மன்னனின்  காலடியில் மக்கள் நிற்பர்.இது தேவை.

545-இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
   பெயலும் விளையுள்ளுந் தொக்கு.

பருவ மழை தவறாது பொழியும் நாட்டில் மட்டுமே மன்னவன் நீதி வழுவாமல் ஆளமுடியும்.இது இக்கால நிலைக்கு ஒத்துவராது.

பருவ மழை பொய்த்துப்போகிறது.இது மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது.

இதை கருத்தில் கொண்டு இக்காலத்தில் ஒரு ஆட்சியாளன் நீதி தவறினால் இக்கால நடைமுறைக்கு ஒத்து வராது.காலமாற்றத்தால்  இந்த குறளின் கருத்தை மாற்றியமைக்க முடியாது.எனவே இது மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.

546-வேலன்று வென்றி தருவது மன்னவன்
   கோலதூஉங் கோடா தெனின்.

வேலாயுதங்கள் இருந்தால் மட்டும் ஒரு மன்னவனுக்கு வெற்றி தேடித்தராது,குடிமக்களை பாதுகாக்கும் செங்கோன்மை ஆட்சிதான் வெற்றி தரும்.இது தேவை

547-இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
   முறைகாக்கும் முட்டாச் செயின்.

உலக மக்களை காக்கும் அரசனை ,அவன் கொண்ட நீதியே அவனைக் காப்பாற்றும்.இது தேவை .
 
548-எண்பதத்தாண் ஓரா முறைசெய்யா மன்னவன்
   தண்பதத்தான் தானே கெடும்.

நீதி கேட்டு வருவோர்க்கு எளியவனாய் கட்சி தந்து நீதி வழங்கா  அரசனுக்கு எதிரிகள் இல்லாமலே தானே அழிந்து போவான்.இது தேவை.

549-குடிபுறாங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
   வடுவன்று வேந்தன் தொழில்.

குடிகளை காத்து நின்று,தனக்கு இழுக்கு வந்தாலும் தன் குடி மக்களுக்கு நீதி வழுவாமல் ஆட்சி புரிவது அரசனின் கடமையாகும்.இது தேவை.

550-கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
   களைகட் டதனொடு நேர்.

கொலை செய்யும் கொடியோரை வேரறுத்தல் ,என்பது ஒரு அரசனுக்கு ,பயிர் செழிப்பாக வளர,  பயிரில் களை எடுப்பதற்கு ஒப்பாகும் .இது தேவை.

குறள் எண் 545 தவிர செங்கோன்மை அதிகாரத்தின் 9 குறட்களும் பயனுள்ளவை.

No comments: