106-இரவு
1051-இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
ஒருவரிடம் இருக்கக் கூடிய பொருளை தன் தேவைக்கு
கேட்கும்போது அப்பொருள் இல்லை என தர மறுக்கும் அவருக்குத்தான் பழியே தவிர
கேட்டவருக்கு பழி அல்ல. இது தேவை.
1052-இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
கொடுப்பவர் மனசும் பெருபவர் மனசும் துன்பமற்ற நிலையில்
இருக்குமானால் இரந்து பெற்ற பொருளாக இருப்பினும் இன்பம் உண்டாகும்.இது தேவை.
1053-கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து.
உண்மை மற்றும் கடமை உணர்வும் கொண்டவரிடத்தில் யாசித்து
பெரும் பொருள் பெருமையுடையதே.இது உண்மை.
1054-இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார்
மாட்டு.
கனவிலும் இல்லை என சொல்லாதவரிடத்தில் இரந்து கேட்பதும்
பிறருக்கு கொடுப்பது போன்ற பெருமையுடையதாகும்.இது தேவை.
1055-கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணனின்
றிரப்பவர் மேற்கொள் வது.
உள்ள பொருளை மறைக்காமல் பிறருக்கு வழங்கிடும்
குணமுடையோர் உலகில் இருப்பதால் தான் அவர்களிடத்தில் பிச்சை எடுப்பவர்
செல்கின்றனர்.இது தேவை.
1056-கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்.
இருப்பதை மறைக்காமல் கொடுப்பவரைக் கண்டாலே இரப்போரின்
வறுமைத் துன்பம் அகன்று விடும்.இதுதேவை
1057-இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து.
பிச்சை கேட்பவர்களுக்கு இழித்துரைக்காமல் உள்ள
உவகையோடு வழங்கும்போது இரப்போர் மகிழ்வர்.இது தேவை.
1058-இரப்பாரை இல்லாயான் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை செல்றுவந் தற்று.
இரப்பவர்கள் யாரும் தம்மை நெருங்க கூடாது என நினைத்து
நடப்பவர்கள்,மரபொம்மை
உலாவும் தன்மையை கொண்டவர்கள்.இது தேவை.
1059-ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
இரப்பவர்களே இல்லை எனில் பொருள் கொடுத்து புகழ் பெற
(வள்ளல்) யாருமே இருக்க மாட்டார்கள்.இது உண்மை .
1060-இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
இரக்கும் போது இல்லை என்று சொல்பவனிடத்தில் கோபம்
கொள்ளகூடாது.அவனுக்கும் தம்மை போன்ற நிலைமை வர
வறுமை காரணமாகி விட்டதே என வருந்துவதே சரி.இது தேவை.
‘இரவு’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
*****************************************************************************************************************
*****************************************************************************************************************
வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்,
பூகோள அறிவை வளர்த்துக்கொள்,
உடலியல் அறிவை வளர்த்துக்கொள்,
உடலுக்கு உயிர் ஊட்டுவது உணவு ,கடவுளல்ல!
அந்த உணவை தவிர்த்து விரதம்
இருக்காதே!
கடவுள் உன்னை கைவிட்டுவிடுவார்,பின்னர், ‘வாழ்க வளமுடன்’ எனும் ஒரு நீரிழிவு
நோய் கும்பல் உன்னை அணைத்துக்கொள்ளும்,ஆனால் உனக்கு வந்த நோய் நீங்காது! சேர்த்த பணம்
தான் கரையும்.
இன்னொரு கும்பல்,யோகா கற்றுக்கொள் சில அற்புதங்களை நீ காணலாம் என
உன்னிடம் பக்குவமாக பணம் பறிக்கும்,குண்டலினி யோக உனக்கு சொல்லித் தருகிறேன்,என கடைசிவரை சொல்லித்
தரமாட்டான், பாம்பாட்டி, கீரீயையும் பாம்பையும் சண்டை போடுவதை காணப்போகிறீர்கள்,அதற்கு முன் காசு
போடுங்கள் என பணம்பரிக்கும் வேலைதான் அது,பாம்போ கீரியோ எது இறந்தாலும் அவன் பிழப்பு
போய்விடும்.
*************************************************************************
No comments:
Post a Comment