Monday, April 23, 2018

76-பொருள் செயல்வகை


                      76-பொருள் செயல்வகை

751-பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
   பொருளல்லது இல்லை பொருள்.

பொருளாக மதிக்க தகாதவர்களையும் பொருளாக மதிக்கச் செய்யும் தகுதி பணம் படைத்தவர்களுக்கே உண்டு.இது உண்மை

752-இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
   எல்லாரும் செய்வர் சிறப்பு.

பணம் இல்லாரை எல்லாரும் இகழ்வர்,பணம் படைத்தவரை பலரும் புகழ்வர். இது தேவை.

753-பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று.

பணம் எனும் பொய்யா விளக்கு கையில் உண்டென்றால்,என்னாட்டின் பகை எனும் இருளையும் போக்கும். இது தேவை.

754-அறன்ஈனும் இன்பம் ஈனும் திறன்றிந்து
   தீதின்றி வந்த பொருள்.

திறனறிந்து தீதின்றி(தீய வழி இன்றி) வந்த பொருள் அறநெறி கொடுக்கும்,இன்பத்தையும் கொடுக்கும்.இது தேவை.

755-அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்.

கருணையுடனும்,அன்போடும் வராத பணம்,தீதென்று விட்டு விட வேண்டும்.இது தேவை.
                              
 756-உருபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்.

வாரிசற்ற பொருளும்,சுங்கத் தீர்வையும் ,பகைவரை வென்று அவர் கட்டும் கப்பம் இவை மட்டுமே அரசருக்கு உரியது.இது தேவை

757-அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
   செலவச் செவிலியால் உண்டு.

அன்பெனும் அன்னை ஈன்றெடுக்கும் அருள் என்மெ குழந்தையை பணம் எனும் செவிலித்தாயால் வளரக்கூடியதாகும்.இது தேவை.

758-குன்றேறியானைப்போர்கண்டற்றால்தன்கைத்தொன்று
   உண்டாகச் செய்வான் வினை.

தன்கையில் பொருள் கொண்டு ஒரு செயலை செய்பவன்,குன்றின் மீதேறி யானைப் போர் காண்பதற்கு ஒப்பாகும்.இது தேவை.

759-செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
   எஃகதனிற் கூரிய தில்.

எதையும் சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள்,பணத்தை சேமிக்க வேண்டும்,பகைவரின் திமிரை அடக்கும் ஆயுதம் பணத்துக்கே உண்டு.இது தேவை .

760-ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
   ஏனை இரண்டும் ஒருங்கு.

நல்ல வழியில் அதிக பொருள் சேமித்தவர்க்கு அறமும், இன்பமும் ஒருசேரப் பெறுவர்.இது தேவை

பொருள் செயல்வகைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
                    *******************************************
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சொல்லக்கூடாத வார்த்தைகள் இதோ,

1-நல்லவேளை (நல்வாய்பு) 2-அதிர்ஷ்ட்டவசமாய் (நல்வாய்ப்பு), 3-தெய்வாதீனம் (வாய்ப்பாய்), வரப்பிரசாதம் (பரிசு), 4-கொடுத்து வைத்தது,5-பிரம்மாண்டம் (மாபெரும்), 6-தலைவிதி (சூழ் நிலையால்),7-அமரர் (உயிர் நீத்தார்) ,8-பகீரத முயற்சி (மாபெரும் முயற்சி),
9-கதி மோட்சம் (தீர்வு அல்லது நிம்மதி),10-வேதவாக்கு (சான்றோர் வாக்கு),11-ராசி,12-சனியனே,13-ராட்சச,14-பேய் மழை .

அடைப்புக்குரிக்குள் இடப்பட்ட சொற்களை பயன்படுத்தலாம்,அல்லது சொல்லாமலே விடப்படலாம்
டிசம்பர்1-15,2016 உண்மை இதழில் வெளியிடப்பட்ட , ‘சொல்லக்கூடாதவை
மேலும் சில வார்த்தைகளை இந்த கூடாதவைகளில் சேர்க்கலாம், கண் திருஷ்ட்டி, கண்ணு பட்டுறப்போகுது,தோஷம்,தோஷ பரிகார நீக்கம், சூன்யம், வினை வைத்துவிட்டார்கள், தலையெழுத்து, தலைவிதி போன்றவை
                          **************************************

No comments: