Saturday, April 28, 2018

92-வரைவின் மகளிர்


                                         92-வரைவின் மகளிர்

911-அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
   இன்சொல் இழுக்குத் தரும்.
                         
அன்பை விரும்பாமல் பொருள் தேடும் பொதுமகளிரின்(ஆய்தொடியார்)இனிமையான சொற்கள் இன்னல்கள் தரும்.இது தேவை.

912-பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
   நயன்தூக்கி நன்னா விடல்.

இவரோடு பேசினால் பயன் கிடைக்குமா என கணக்கிடும் பெண்களின் உறவை  நம்பி ஏமாறுதல் கூடாது.இது தேவை.

913-பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று.

பொதுமகள் பொய்யுரைக்கு மயங்குவது எது போன்றது  எனில் இருட்டறையில் ஓர் அனாதைப் பிணத்தை அணைப்பதால் வரும் இன்பத்தைப் போலாகும்.இது தேவை.

914- பொருட்பொருளர் புன்னலந் தோயர் அருட்பொருள்
    ஆவியும் அறிவி னவர்.

பொருளில் இன்பம் தேடும் விலை மகளிரின் இன்பத்தை விட அருளில் இன்பம் அடைபவர்கள்  அறிவுடையவர்களாக கருதப்படுவர்.இது தேவை.

 915-பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.

பொது நலம் பேணும் அறிவுடையவர்கள் பொது மகள் தரும் இன்பத்தை விழையார்(விரும்ப மாட்டார்).இது தேவை.

916-தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
   புன்னலம் பாரிப்பார் தோள்.

அழகால் அற்ப சந்தோசத்தை(புன்னலம்) வழங்கும் பொதுமகளின் தோளை அறிவுடையார் என்றும் விரும்பார்.இது தேவை.

917-நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
   பேணிப் புணர்பவர் தோள்.

நிறை நெஞ்சம் இல்லாதவர் பொய்யான அன்பு கொண்ட பொதுமகள்- தோளை நெஞ்சுரமற்றவர்கள் மட்டுமே பற்றுவர்.இது தேவை.

918-ஆயம் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு.

வஞ்சக எண்ணங்கொண்ட பெண்ணிடம் மயங்குவதை, அறிவற்றவனுக்கு ஏற்பட்ட ‘மகளிர் மயக்கம்’ என கூறுவர் .இது தேவை.

919-வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
   பூரியர்கள் ஆழும் அளறு.

வேறுபாடு அற்ற முறையில் பொருள் ஒன்றே குறியாக இருக்கும் பொதுமகள் மென்தோளை பற்றி இருப்பவன் நரகம் எனும் சகதியில் வீழ்ந்து கிடப்பவன்.இது தேவை.
                         
920-இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
   திருநீக்கப் பட்டார் தொடர்பு.

உள்ளம் ஓரிடத்திலும் உடல் ஓரிடத்திலும்(இருமனப் பெண்டிர்)குணம் கொண்ட பெண்,மது,சூது ஆகிய மூன்றுமே சுகம் என மூழ்கியிருக்கும் ஒருவனைவிட்டு திரு(செல்வம்)நீங்கி விடும்.இது தேவை.

‘வரைவின் மகளிர்’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
     ******************************************************************************************************************
குழந்தைகளுக்கு தாயத்து கட்டுவது,கழுத்தில், இடுப்பில்,மணிக்கட்டில்,கணுக்காலில்  போன்ற இடங்களில் கருப்பு மற்றும் சிவப்புக் கயிறு கட்டும் பழக்கம் காட்டுவாசிகளாக இருந்தபோது உள்ள மனித பழக்கங்கள்!

 ஆனால் இப்பொழுது MA ,MBBS ,MD,MS, ME போன்ற படித்த மக்களுக்கும் இது போன்ற கயிறு கட்டும் பழக்கம் உள்ளது.

தற்போது,ஆண்களும்,பெண்களும் சகோதரர்களாக நினைத்து ஒருவர் மற்றவருக்கு கயிறு கட்டும் பழக்கம் தென்னகத்திலும் பரவி வருகிறது.

கயிறு கட்டும் விருப்பத்தை தனக்குச்சாதகமாக்கி மூடநம்பிக்கையைப்புகுத்தி அதில் மதச் சாயம் பூச இந்து மத இடைத்தரகர்கள் முயலுகின்றனர்.

தொடர்ந்து கயிறு கட்டும் பழக்கம் இருப்பவர்களின், கயிற்றை சோதனைக்கு உட்படுத்தியதில்,அந்த கயிறுகளே தோல் நோய்க்கு காரணம் என்பதை அறிவியலாளர்கள் சொல்லியும் இன்னும் பலர் அந்த கயிறு  வேண்டாம் எனும் தெளிவு பெறவில்லை!    
                             **************************************
                         

No comments: