103-குடிசெயல் வகை
1021-கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்.
குடிப் பெருமை உயர்த்தும் செயலில் சோர்வடையாமல்
முயல்பவன் பெருமைக்கு மேலானது ஏதுமில்லை.இது தேவை.
1022-ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி.
விடா முயற்சியும் சிறந்த அறிவும் கொண்டு ஒருவன்
பாடுபாட்டால் அவன் குடிமக்களின் பெருமை உயரும்.இது தேவை.
1023-குடிசெய்வல் என்னும் ஒருவருக்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந்
துறும்.
தன் குடிமக்கள் உயர்வடைய பாடுபடுபவனுக்கு தெய்வம் கூட
அவனுக்கு சுறுசறுப்பாக முந்திக்கொண்டு உதவி புரியும்.
தெய்வம் என்பது அறிவியல் தன்மைக்கு
மாறானது.நிருபிக்கப்படும் தன்மை யற்றது.எனவே இது மாணவர்கள் கற்க தகுதியற்றது.இது தேவையற்றது.
1024-சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.
தன்னை சார்ந்த குடிகளை உயர்த்த காலம் தாழ்த்தாமல்
முயல்பவருக்கு வெற்றிகள் தானாகவே வந்து குவியும்.இது தேவை.
சுற்றமாச் சுற்றும் உலகு.
குற்றமற்றவனாகவும் குடிமக்களின் நலத்திற்கு பாடுபடும்
அரசனாக இருப்பவனை மக்கள் தங்கள் உறவினர்களாக கருதி சூழ்ந்து கொள்வர்.இது தேவை.
1026-நல்லாண்மை என்ப தொருவர்க்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
நல்லாண்மை என்பது நல்ல திறமை.தான் பிறந்த குடிக்கே
பெருமை சேர்ப்பவர் ஆவார்.இது தேவை.
1027-அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
போர்க்களத்தில் தம் வீரர்களை காப்பாற்றும் பொறுப்பு
போர்படை தளபதிக்கு உள்ளது போல்,தம் குடும்பத்தார் பாதுகாப்பையும் குடும்பத் தலைவன்
ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தேவை.
1028-குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
குடிகாத்தல்(அரசன் மற்றும் குடும்பத் தலைவன்)
என்பதற்கு நேரம் காலம் என ஒன்றில்லை.தலைவனுக்கு சோம்பல்தனம் குடி கொண்டால் குடிகள் நலன் சீர்குலையும்.இது தேவை.
1029-இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
தன்னை சார்ந்த குடிமக்களுக்கு துன்பம் வராமல்
பார்த்துக்கொள்ளும் தலைவனை துன்பத்தை தாங்குவதற்காகவே பிறப்பெடுத்தவன் என
போற்றப்படுவான்.இது தேவை.
1030-இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
துன்பம் வரும்போது தாங்கி நிற்காத பிள்ளைகளை உள்ள
குடியானது, மரத்தை
கோடாரி வெட்டி சாய்ப்பது போல் குடி கெடும்.இது தேவை
No comments:
Post a Comment