87-பகை மாட்சி
861-வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
இந்த குறளுக்கு பரிமேலழகர்,மு.வ,சாலமன் பாப்பையா போன்றோர் வலியவரை
எதிர்து போரிடலை தவிர்த்தும்,பலவீனமானவர்களை
எதிர்த்தும் போரிடலாம் எனும் பொருளில் உரை எழுதியுள்ளனர்.
ஆனால் கலைஞர் மட்டும் தம்மின் வலியாரை எதிர்த்து
போரிடலாம்,மெலிந்தாரை
ஒதுக்கிவிடலாம் எனும் கருத்தினை கொண்டுள்ளார்.
இங்கே ‘மாறேற்றல் ஓம்புக’எனும்
வழக்கொழிந்த வார்த்தைகளுக்கு அவரவர்களுக்கு
தெரிந்த பொருள் கொண்டு எழுதியுள்ளனர்.
பரிமேலழகர் ‘ஓம்புக’ எனும் வார்த்தைக்கு ஒழிக
என்கிறார்.மாறாக தமிழ் அகராதியில் ஓம்புக எனில் உடன் படுதல்,காத்தல்,வேண்டுதல் எனும் பொருள்பட
கூறப்பட்டுள்ளது.
இங்கே கலைஞரின் உரையையே நாம் ஏற்றுக்கொண்டால் இந்த
குறள் மாணவர்கள்
தகுதி வாய்ந்தது.
862-அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
அன்பானவர்கள் அருகில் இல்லாமல்,அறிவார்ந்த சான்றோர்கள் துணையில்லாமல்,தானும் வலிமையற்றிருக்கும் போது
பகைவரை எப்படி வெல்ல முடியும்.?இது
தேவை.
863-அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
அச்சம் கொண்டவன்
மடமை உள்ளவன்
பண்பற்றவன்
இரக்கமற்றவன்
இணைந்து வாழும் இயல்பற்றவன் – இந்த ஐவகை மனிதர்களையும் பகைவர்கள் எளிதில் வென்று விடுவர். இது தேவை.
864-நீங்கான் வெகுளி நிறையிலான் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
அடிக்கடி சினங் கொள்ளும் அறிவிலானை,எங்கும் எந்நேரத்திலும்
தோற்கடிப்பது எளிது.இது தேவை.
865-வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
நல்வழி நோக்காதவன்,
வந்த வாய்ப்புகளை உதறியவன்,
பழிக்கு அஞ்சாதவன்,
பண்பற்றவன் என ஒருவன் இருந்தால் அவனை பகைவரால் எளிதில்
வெற்றிகொள்ள முடியும்.இது தேவை.
866-காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப்படும்.
பெரும் கோபக்காரனையும்,காமக் கொடூரனையும் எதிர்த்து போரிடலாம்.இது தேவை.
மாணாத செய்வான் பகை.
நம்மோடு இருந்து கொண்டு நமக்கு மறைமுகமாக தொல்லை
தருபவனை எந்த விலை கொடுத்தாவது அவனை பகையாளிக்கிக் கொள்ள வேண்டும்.அரசனுக்கு இது தேவை.
868-குணனிலானாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து.
நற்குணமற்றவனாகவும்,பல குற்ற செயல்களை புரிபவனாகவும் ஒருவன் இருந்தால் அவனுக்கு
பக்க துணை யாருமின்றி பகைவர்களால் வீழ்த்தப்படுவான்.இது தேவை.
869-செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
அறிவில்லாதவர்களும் கோழைகளும் ஒருவருக்கு பகைவர்களாக
அமைவார்களேயானால்,அவருக்கு
வெற்றி எனும் இன்பம் நிலைத்து நிற்கும்.இது தேவை.
870-கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
கல்லாதவரை பகைத்த தனால் வரும் பொருளை ,நீதி நூல் கற்றவர் எப்பொழுதும்
ஏற்றுக்கொள்வர்.இது தேவை .
‘பகைமாட்சி’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment