Monday, April 30, 2018

107-இரவச்சம்


                         107-இரவச்சம்

1061-கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.

இரக்கச் சிந்தனை கொண்ட வள்ளல்களிடம் கூட இரவாமல் இருப்பது சிறப்பனதாகும்.இது தேவை.

1062-இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.

இரந்து தான் உயிர்வாழ வேண்டி மனிதர்கள் இருப்பார்களேயானால்,இந்த உலகைப்படைத்ததாக சொல்லப்படும்  இறைவன் இரந்து போகட்டும்.சிறந்த பகுத்தறியும் சிந்தனை.இது தேவை.

1063-இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.

வறுமை எனும் துன்பத்தை இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப்போல் வேறு கொடுமை இல்லை.இது தேவை.

1064-இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.

வாழ வழியே இல்லையே என பிறரிடம் கையேந்தாத பண்புக்கு இந்த உலகமே ஈடாகாது. (உழைத்து வாழ வேண்டும் என்பதுதான் அதன் பொருள்)இது தேவை .

1065-தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
     துண்ணலின் ஊங்கினிய தில்.

தெளிந்த நீரைப்போல கூழ் கிடைத்தாலும் அது உழைப்பினால் வந்தது என நினைத்து குடிக்கும் போது உண்டாகும் இன்பத்திற்கு ஈடே இல்லை.இது தேவை

1066-ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்.

(தான் வளர்க்கும்) பசுவிற்கு தாகம் என நீர்வேண்டி பிறரிடம் இரப்பது போன்ற இழிவான செயல் வேறெதுவும் இல்லை.இது தேவை.

1067-இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
    கரப்பார் இரவன்மின் என்று.

கையில் உள்ளதை மறைத்து வைத்துக் கொண்டிருப்பவனிடம் கையேந்த வேண்டாம் என கையேந்திக் கேட்டுக் கொள்கிறேன்.இது தேவை

1068-இரவுள்ள உலகம் உருகும் கரவுள்ள
     உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இருப்பதை மறைத்து வைத்துக் கொண்டு வாழும் கல்நெஞ்சனிடம், இரப்பு எனும் படகு மோதினால் நொறுங்கி விடும்.இது தேவை.

1069-இரவுள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள 
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இரந்து வாழ்வோர் நிலைகண்டு மனம் உருகுகிறது,அதே நேரத்தில் இருப்பதை மறைத்து வாழ்வோரைப்பார்த்தால் உருக மனமில்லாமல் உள்ளமே கெட்டுவிடுகிறது.இது தேவை.
                                                              
  1070-கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
      சொல்லாடப் போஒம் உயிர்.

இருப்போர் உள்ளதை மறைத்து வாழுபவரிடம், இரப்போர் இரக்கும் போது இரப்போரின் உயிரே போய்விடுகின்றது.அதே நேரத்தில் இல்லை என சொல்பவன் உயிர் மட்டும் எங்கே ஒளியும்?இது தேவை.

இரவச்சம்எனும் அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
         ****************************************************************
ஏன் இந்த, ஏழாம் அறிவு இயக்கம்?’
பேசத்தெரிந்த மனிதன், ஆறாம் அறிவைச் சார்ந்தவன்.
தன்னை விட கீழ் நிலையில் உள்ள மற்ற 5,4,3,2, மற்றும் ஓர் அறிவைப் பெற்ற விலங்கு மற்றும் தாவரங்களை பக்குவமாக பயன்படுத்துவது மட்டுமல்ல அவைகளை விட கீழ்தரமான மனிதனாக வாழக்கூடாது,

பரிணாம வளர்ச்சியில் வந்த மனிதன், மனித குலத்துக்கு நல்லது எது?கெட்டது எது?என  பகுத்தறியும் சிந்தனை கொண்டவனாக, ஆறாம் அறிவு கொண்ட மனிதனாக இயங்க வேண்டும்.ஆனால் அதில் தவறு செய்யும் மனிதர்களாகவே உலகெங்கும் உள்ளனர்.எந்த மதமாக இருந்தாலும், தவறு செய்யக்கூடியவன் தான் மனிதன் எனவும் பாவ மன்னிப்பு வழங்குவார் இறைவன் எனவும் மேலும் மேலும் தவறுகளை செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் தன் உழைப்பையெல்லாம் வீணாக்கும் மனிதர்ளை திருத்தவே, இலவசமாக வழிகாட்டவே இயங்குவது தான் இந்த ஏழாம் அறிவு இயக்கம் 
Visit:www.thiru-rationalism.blogspot.in
Facebook.com/ஏழாம் அறிவு இயக்கம்,படைவீடு திருவேங்கடம்
TWITTER.COM/7TH SENSE MOVEMENT
WHATSAP@pthiruvengadam
                     **************************************

No comments: