Saturday, April 7, 2018

45-பெரியாரை துணைக் கோடல்


                45- பெரியாரைத் துணைக் கோடல்

441-அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
     திறன்றிந்து தேர்ந்து கொளல்.

அறவழி சிந்தனை கொண்ட மூத்த அறிஞர்களின் நட்பை தேடி பெற வேண்டும்.இது தேவை .

442-உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
   பெற்றியார்ப் பேணிக் கொளல்.

தனக்கு வந்த நோய் நீக்க முற்காக்க வேண்டுமானால்  பெரியாரின் துணை கொள்ள வேண்டும்.இது தேவை.
                            
443-அரியவற்று ளெல்லாம் அரிதே  பெரியாரைப்
   பேணித் தமராக் கொளல்.

பெரியரைத் தேடி போற்றி பாராட்டி நட்புக் கொள்ளுதல் அரிய செயல்களில் எல்லாம் தலை சிறந்த செயல்.இது தேவை.

444-தம்மிற் பெரியார் தமாரா ஒழுகுதல்
   வன்மையு ளெல்லாந் தலை.

ஒருவர்,தன்னைவிட அறிவும் ஆற்றலும் கொண்ட பெரியாரைத் தேடி பழகுதல் அவருக்கு மிகப்பெரிய வலிமைதரும்.இது தேவை.

445-சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
   சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞரை சுற்றி வைத்துக்கொள்வது ஒரு மன்னருக்கு  நன்மை தரும். இது தேவை .
                            
446-தக்கார் ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
   செற்றார் செயக்கிடந்த தில்

அறிவியலாளரைத் துணை கொண்டு அவர்களோடு சூழ்ந்திருந்தால்,பகைவர்களால் எந்த தீங்கும் விளைவிக்க முடியாது.இது தேவை.

447-இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரோ
      கெடுக்குந் தகைமை யாவர்.

அக்கரையுடன் ஒருவருக்கு அறிவுரை சொல்பவர் உள்ளபோது,அவரை கெடுக்கும் ஆற்றல் யாருக்கும் வராது.இது தேவை.
                          
448-இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
      கெடுப்பா ரிலானுங் கெடும்.

மன்னரின் குறை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.இது தேவை.

449-முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
      சார்பில்லார்க் கில்லை நிலை.

முதலில்லா வியாபாரத்தில் லாபம் இல்லை,அதுபோல கட்டத்தை தாங்கி நிற்கும் தூண் இல்லா நிலை போன்றது அரசன் நிலையும்.இது தேவை.

450-பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே
   நல்லார் தொடர்கை விடல்.

நல்லவர்களின் தொடர்பை கைவிடுவது என்பது பலருடைய பகையைத் வலியத் தேடிக்கொள்வது போலாகும்.இது தேவை.
பெரியாரைத் துணைக்கோடல்அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
 *******************************************************************************************************************
ஆகமம்-வேதாகமம் விதி என்றால் என்ன?ஆகமம் வழி முறை,வேதவழிமுறை இதை பிராமணர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும்.
ஆதி சங்கரர் கூறுகின்றார், ‘கடவுள் மட்டுமே நிஜம்,மற்றதெல்லாம் மாயம்,பொய் .ஆகமங்கள் பொய்களை திரட்டிவந்து உண்மையை பூஜிக்க செய்கின்றன’,பூஜை என்பது பூ-செய் எனும் தமிழில் தோன்றிய வார்த்தை என்கிறார் தாத்தாச்சாரி.
ஆகமங்கள் தவறு,அதை அடியொற்றுவதும் தவறு,என்கிறார் சங்கரர்.
அப்படியெனில் மோட்சம் பெற வழி,இதோ,
சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்சலசித்தம்
நித்சலசித்தே ஜீவன்முக்திஇதன் பொருள் இதோ,
உலகில் பற்று குறையும் போது உன்மனம் மோகத்தை விட்டுவிடுகிறது,
மோகத்தை விட்டால் சலனமற்ற சித்தம் வாய்க்கிறது.
சித்தத்தில் சலனம் இல்லையெனில் உனக்கு மோட்சம் கிடைக்கிறது.இதற்காக கர்மா வழி பாடு தேவையில்லை என்கிறார் சங்கரர்.
இப்படி சொன்ன சங்கரர் தன் 32 வயதில் (மோட்சம்?)இறந்து விட்டார்..
                   /********************************

No comments: