Thursday, April 19, 2018

65-சொல்வன்மை


                    65- சொல்வன்மை

641-நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
   யாநலத் துள்ளதூஉம் அன்று.

நாவன்மைக்கு ஈடு எதுவும் இல்லை,செல்வத்துள் சிறந்தது சொல்வன்மை.இது தேவை.

642-ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
   காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

குறையற்ற பேச்சுக்களையே பேச வேண்டும்,ஆக்கமும் கேடும் சொல்லால் ஏற்படும்,சொல்லில் கவனம் வேண்டும்.இது தேவை.

643-கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
   வேட்ப மொழிவதாம் சொல் .

கேட்பவர்கள் மனதை கவரும்படியும்,கேட்காதவர்களும் தேடிவந்து கேட்ககூடியாதாக சொல் அமையவேண்டும்.இது தேவை.

644-திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
   பொருளும் அதனினூஉங் கில்.

பேச்சில் தெளிவு வேண்டும்,அந்த சொல் வன்மையில் அறமும்,உண்மையும் இருக்க வேண்டும்.இது தேவை.

645-சொல்லுக சொல்லைப்பிறிதோர்சொல்அச்சொல்லை
   வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

சொல்லும் சொலை பிரிதொரு சொல்லின் பொருளை வெல்லாது என உணர்ந்த பிறகே சொல்ல வந்த சொல்லை சொல்ல வேண்டும்.இது தேவை.
                              
646-வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
   மாட்சியின் மாசற்றார் கோள்.

பிறர் விரும்பி கேட்டு உணரும்படி கருத்துக்களை சொல்வதும் ,பிறர் கூறும்  பயனுள்ள சொல்லை ஏற்றுக்கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.இது தேவை .

647-சொலல்வல்லவன் சோர்விலன் அஞ்சா னவனை
   இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

சொல்லாற்றல் உள்ளவன். சோர்விலாதவன், அச்சமில்லாதவன்  போன்றோனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியாது.இது தேவை.
                             
648-விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

சொல்லாற்றல் வல்லமைபடைத்தவர் இட்ட பணியை செய்ய உலகமே முன்னிற்கும்.இது தேவை

649-பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
   துணர விரிந்துரையா தார்.

சொல்ல வந்ததை தெளிவில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இயலாதவர்கள்.இது தேவை

650-இணரூழ்த்து நாறா மலரணையர் கற்ற
   துணர விரிந்துரையா தார்.

பல நூல்களை கற்றும் அத்தனையும் பிறருக்கு உணர்த்த முடியாதவர் வாசமற்ற கொத்தான மலரைப்போன்றவர்.இது தேவை.
சொல்வன்மை அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.

No comments: