Monday, April 30, 2018

104- உழவு


                            104- உழவு
1031-சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.

மனிதன் உயிர்வாழ உணவே தலை,அதை உருவாக்க ஏர் முக்கியம்.சுழலும் உலகம் ஏரைச் சுற்றியே சுழலும்.இது தேவை
                           
1032-உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தொழுவாரை எல்லாம் பொறுத்து.

எத்தொழில் புரிபவர்க்கும் பசி போக்கிடும் உலகத்தின் அச்சாணித் தொழிலாக விளங்குவது உழவு தொழிலே.இது தேவை.

1033-உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

உழுதுண்டு வாழ்பவரே உயர்ந்தவர்,மற்றவரெல்லாம் அவர்களைத் தொழுதுண்டு பின் செல்பவர்.இது உண்மை.

1034-பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பவர்
    அலகுடை நீழ லவர்.

பல அரசுகளின் நிழல்களையும் தன் குடை நிழலின் கீழ் கொண்டுவரும் ஆற்றல் கொண்டவர்கள் உழவர்கள்.இது தேவை.

1035-இரவார் இரப்பார்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண்  மாலை யவர்.

தன்கையை நம்பி இருப்பவர்,பிச்சை எடுக்க மாட்டார்,பிச்சை எடுப்பவர்க்கு மறுக்காமல் வழங்குவார்,அவரே உழவர்.இது உண்மை.

1036-உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லா பற்றையும் விட்டுவிட்ட துறவிகள் தாங்கள் வாழ உயவரின் கையை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டும்.இது தேவை.
                                 
1037-தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
     வேண்டாது சாலப் படும்.

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்வரை உழுது பயிட்டாலே ஒரு பிடி எருவிடாமலே பயிர் செழித்து வளரும்.இது தேவை.

 1038-ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
     நீரினு1ம் நன்றதன் காப்பு.

ஏர்பூட்டி உழுவதை விட எருவிடுதல் நல்லது,களை மற்றும் நீர் பாய்ச்சுவதும்  நல்லது ,அதைவிட நல்லது பயிரை பாதுகாப்பது.இது தேவை.

1039-செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும் .

கட்டிய மனைவியை கவனிக்க வில்லை எனில் அவள் அவனை விட்டு விலகி விடுவாள்,அது போல தான் நட்ட பயிரையும் நாள் தோறும் கவனிக்கவில்லை எனில் அவை அவனைவிட்டு போய்விடும்.இது தேவை.

1040-இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.

நிலமெனும் மனையாளை வைத்துக்கொண்டு என்னிடம் ஏதுமில்லை என சொல்லி சோம்பலாய் இருப்பவனைப் பார்த்து மனையாள் அவனை கேலியாக சிரிப்பாள்.இது தேவை.

உழவுஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.

No comments: