Monday, April 9, 2018

47-தெரிந்து செயல்வகை


                      47-தெரிந்து செயல்வகை

461-அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
   ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

ஒரு செயலில் இறங்குமுன் அந்த செயலால் தமக்கு என்ன ஊதியம் கிடைக்கும்,லாபம் என்ன ?நட்டம் என்ன ஆய்ந்த பிறகே இறங்க வேண்டும்.இது தேவை .

462-தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
   கரும்பொருள் யாதொன்று மில்.

எந்த ஒரு செயலையும் தன் இனத்தோடு தேர்ந்தெடுத்து செய்தால் வெற்றி நிச்சயம்-இது தேவை

463-ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
   ஊக்கா ரறிவுடை யார்.

பெரிய லாபம் கிடைக்கும் என எண்ணி தன் கை முதலையும் இழக்க மாட்டார்கள் அறிவிற் சிறந்தோர்.இது தேவை.

464-தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
   ஏதப்பா டஞ்சு பவர்.
     
குற்றம் வந்து சேரும் என அஞ்சி விளைவுகளை எண்ணிப்பார்த்து அந்த களங்கத்தை செய்ய அஞ்சுவர்.இது தேவை.

465-வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
   பாத்திப் படுப்பதோ ராறு.

வகை தொகை தெரியாம பகைவரின் மேல் படையெடுத்து பகைவரின் பலத்தை வளர்ப்பதுபோல் ஆகிவிடக்கூடாது.இது தேவை
                             
466-செயத்தக்க அல்ல செயக்கெடுஞ் செயதக்க
   செய்யாமை யானுங் கெடும்.

செய்யக் கூடாத செயலை செய்வதால் கேடு வந்து சேரும், அதேபோன்று செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் கெடும்.இது தேவை.

467-எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
   எண்ணுவ மென்ப திழுக்கு.

ஒரு செயலை துவங்குமுன் நன்கு சிந்திக்க வேண்டும்,செயலில் இறங்கிய பிறகு சிந்திப்பது இழுக்கு.இது தேவை.

468-ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
   போற்றினும் பொத்துப் படும்.

எத்தனை பேர் துணை இருந்தாலும் முறையாக செய்யப்படாத முயற்சி இறுதியில் தோற்றுவிடும்.இது தேவை.

469-நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
   பண்பறிந் தாற்றாக் கடை.

ஒருவர் குணமறிந்து அவருக்கு உதவ புரியவேண்டும், இல்லையெனில் அதுவே தீமையில் போய் முடியும்.இது தேவை.

470-எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
   கொள்ளாத கொள்ளா துலகு .
நம்முடைய நிலமைக்கு தகுந்த செயலையே செய்ய வேண்டும் மாறாக செய்தால் சான்றோர் நம்மை பழிப்பர்.இதுதேவை.தெரிந்து செயல்வகைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.

No comments: