44-குற்றங்கடிதல்
431-செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
செருக்கு(இறுமாப்பு),சினம்,சிறுமை இல்லாதவர்களின் செல்வாக்கு பெருமை
தரத்தக்கதாகும்.இது தேவை.
432-இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
மானம் போகும் குற்ற செயல்களில் மகிழ்ச்சி காணும் ஒருவனுக்கு தலைமை
ஏற்கும் தகுதி யற்றவன் ஆகிறான்.இது தேவை.
433தினைத்துணையாங்குற்றம் வரினும்பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
தங்கள் மீது தினையளவு(சிறிய) குற்றம் சுமத்தப்பட்டாலும்,அதை
பனையளவு(பெரிய)அளவு குற்றமாக கருதி அதைச் செய்யாமல் தங்களை காத்துக்கொள்வர்,இது தேவை.
434-குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தருஉம் பகை.
குற்றம் என்பது பகைமையை ஏற்படுத்தும் என்பதால் அந்த குற்றத்தை செய்யாமல்
விட்டு விட வேண்டும்.இது தேவை.
435-வருமுன்னர் காவாதான் வாழ்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
முன் எச்சரிக்கையுடன் தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை
நெருப்பு பட்ட வைக்கோல் போர் போலாகிவிடும்.இது தேவை.
436-தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
தன் குற்றத்தை உணர்ந்து பின் அதை
நீக்கியபின்,பிறர் தவறை சுட்டிக்காட்டும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?இது தேவை.
437-செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
நற்பணிகளுக்கு பயன் படா கருமியின் செல்வம், பயனின்றி பாழாகிவிடும்.இது
உண்மைதான்,தேவையும்
கூட.
438-பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் பணத்தை சேர்ப்பதிலே பற்றுக்
கொள்ளுபவர்,எல்லா குற்றங்களையும் விட தனிப்பெறும்
குற்றம் செய்வதற்கு ஒப்பாவார் .இது தேவை.
439-வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
எப்பொழுதும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிக்கொண்டு,பிறருக்கு நன்மை தராத
செயல்களில் ஈடுபடுக்கூடாது.இது தேவை.
440-காதல காதல் அறியமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
பகைவருக்கு தெரியாமல் ,தன் விருப்பத்தை
நிறைவேற்றுபவரிடம் பகைவரின் எண்ணம் நிறைவேறாமற் போகும்.இது உண்மை.தேவை.
‘குற்றங்கடிதல்’ அதிகாரத்தின் பத்துக்
குறட்களும் பயனுள்ளவை.
****************************************************
****************************************************
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்,இவர் பிராமண இனங்களில் வேதங்களை கரைத்துக்குடித்த/கரைத்துகுடிக்கும்
தாத்தாச்சாரி பிரிவைச் சார்ந்தவர்,இவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளிடம் நெருக்கமாக
பழகியவர்,தன் இன மக்களின் பித்தலாட்டங்களை தடுக்க மகாப்பெரியவரிடம் முரண்பட்டவர்.
இதன் விளைவாக, ‘இந்துமதம் எங்கே போகிறது?’எனும் நூலில், வேதங்களின்
மூலப்பொருளை தமிழில் தருகின்றார்,தமிழை மிலேச்ச(அன்னிய அல்லது நீச்ச)மொழி என
ஒதுக்கிய சந்தரசேகரேந்திரர் கருத்துகளுக்கு மாறுபட்ட சிந்தனைகளை இந்நூலில்
விதைக்கின்றார்.தமிழில் பேசினால் தீட்டு,பேசிய உடனே தலைமுழுகும் பழக்கம் கொண்ட
சந்திரசேகரிடம், தாத்தாச்சாரி மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய அனுபவம்
உண்டு.தமிழின் பெருமைகளை இந்நூலில் தருகின்றார்,சிலவற்றை இங்கே காணலாம்.
.***********************************************
No comments:
Post a Comment