Thursday, April 26, 2018

86-இகல்


                             86-இகல்

851-இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
   பண்பின்மை பாரிக்கும் நோய்.

மனவேறுபாடு(இகல்) என்பது, மற்ற உயிர்களோடு பழக முடியாமல் போகும் ஒரு நோய். இது தேவை.

852-பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
   இன்னாசெய் யாமை தலை.

பிரிவை உண்ண்டாக்க கருதி ஒருவன் கெடுதல் செய்வானானால்,அவனுக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்து நாம் இகழாமல் இருந்தால் போதும்.இது தேவை.
                           
853-இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
   தாவில் விளக்கம் தரும்.

இகல் எனப்படும் துன்பநோயை ஒருவன் நீக்கினாலே, அவனுக்கு புகழ் எனப்படும் அழிவின்மையை கொடுக்கும்.இது தேவை.

854-இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
   துன்பத்துள் துன்பம் கெடின்.

இகல் எனும் மன வேறுபாடு இல்லாத ஒருவனுக்கு இன்பத்துள் இன்பம் பயக்கும்.இது தேவை .

855-இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
   மிகல்ஊக்கும் தன்மை யவர்.

மனவேறுபாடுக்கு எதிராக நிற்கும்  வல்லவரை வெல்லும் ஆற்றல் உள்ளவர் யாரோ?இது தேவை.
                               
856-இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
   தவலும் கெடலும் நணித்து.

பிறருடன் மன வேறுபாடு கொண்டு இனிமையாக வாழலாம் என்பவன் வாழ்க்கை சிலகாலமே வாழமுடியும் ,குறுகிய காலத்தில் அழிவான்.இது தேவை.

857-மிகல்மேவல் மெய்பொருள் காணார் இகல்மேவல்
   இன்னா அறிவி னவர்.

மனவேறுபாடு எனும் தீய சிந்தனை உடையவர்,வெற்றி பெறும் வழியை உணரமாட்டார்.இது தேவை.

858-இகலிற் எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
   மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு
                           
மனவேறுபாடை வரவேற்காமல் இருப்பவனுக்கு செல்வம் சேரும்,இல்லையேல் கேடு சூழும்.

859-இகல் காணாணன் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.

ஆக்கம் (நல்லது நடக்கும் போது)வரும்போது ஒருவன் மன விகாரம் அடையமாட்டான்,தனக்குத்தானே விகாரம் கொள்பவனுக்கு காரணமே தேவை இல்லை.இது தேவை.

860-இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.

இகலினால்(மன வேறுபாட்டால்) ஒருவனுக்கு துன்பம் வரும்.நல்லிணக்க நட்பால் ஒருவனுக்கு நன்மை எனும் செருக்கு உண்டாகும்.இது தேவை

இகல்அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.

No comments: