53-சுற்றம் தழால்
521-பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
வறுமையில் ஒருவன் வாடினாலும் ,அவனுடைய பழைய உறவினை பாராட்டும் பண்புடையவர்கள்
உறவினர்களே ஆவர்.இது தேவை.
522-விருப்பறாச் சுற்றம் இவயயின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
எந்த நிலையிலும் பாசத்தோடு இருக்கும்
சுற்றம் ஒருவருக்கு கிடைக்குமேயானால் ,அது அவருக்கு ஆக்கமும்
வளர்ச்சியும் அளிக்க கூடியதாகும்.இது தேவை.
523-அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
உற்றார் உறவினருடன் அளவளாவும் குணம் இல்லாதவனுடைய வாழ்க்கை என்பது கரையற்ற
குளத்தில் நீர் உள்ளது போன்றதாகும்.இது தேவை.
524-சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
சுற்றத்தோடு சூழ ஒருவன் வாழ்வதே ஒருவன் தான் பெற்ற செல்வத்தினால் கிடைத்த
பயனாகும்.இது தேவை.
525-கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
எப்பொழுதும் இன்முகத்தோடு உடையவரை, என்றும் சுற்றத்தார் சூழ வாழ்ந்து
கொண்டிருப்பர்.இது தேவை.
526-பெருங்கொடையான் பேணாணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
பெருங் கொடையாளியாகவும்,கோபத்தை விலக்கி வாழும் பண்புடையாளனாகவும் இருக்கும்
ஒருவனைச் சுற்றி சுற்றத்தார் சூழ
மகிழ்ந்திருப்பான்.இது தேவை.
527-காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கையின் குணமான சுற்றத்தாரை கூவி யழைத்து உணவுண்ணும் பழக்கமுடைய மனிதன்
உலகில் உயர்ந்து இருப்பான்.இது தேவை.
528-பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர்.
பொது நோக்கு உடைய மன்னன் மக்களை சமமாக பாவித்து அவரவர் ஆற்றலுக்கேற்ப
பயனாக்கிக் கொண்டால் யாவரும் அந்த அரசை தாங்கி நிற்பர்.இது தேவை.
529-தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்.
ஏதோ ஒருகாரணம் கூறி பிரிந்துபோன உறவினர்கள்,அது பொருந்தா காரணம் என
உணர்ந்தபின் மீண்டும் உறவு கொள்ள வருவர்.இது தேவை.
530-உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந் தெண்ணிக் கொளல்.
ஏதோ ஒரு காரணத்திற்காக மன்னனை விட்டு பிரிந்தவன் மீண்டும் வந்தால் நன்கு
ஆரய்ந்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.இது தேவை.
‘சுற்றந்தழால்’ அதிகாரத்தின் பத்துக்
குறட்களும் பயனுள்ளவை
***********************************************************************************************.
***********************************************************************************************.
மடங்களின் கூட்டம் நடந்தது,மதுரை ஆதீனம், ‘வட நாட்டில் காசியில்
கோயிலுக்கு வருபவர்கள் அவரவர் பூசை செய்கின்றனர்,அதுபோல இங்கும் தமிழில்
அர்ச்சனை நடைபெற மக்களை அனுமதிக்க வேண்டும்’ என்றார்
மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாப்பெரியவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘சூத்தராள் பூசை
பண்றது,அதுவும்
தமிழில் பண்றது ஏத்துக்க முடியாது’ என்றார்.
பின்னர்,மடங்கள் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டது.ஆண்டிகள் மடம் கட்டினால் யார்
ஆள்வது? என்கிற
கதையாகிவிட்டது !
*************************************
No comments:
Post a Comment