Thursday, April 19, 2018

61-மடியின்மை


                        61- மடி இன்மை

601-குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
   மாசூர மாய்ந்து கெடும்.

என்னதான் பெருமை மிக்க குடியில் பிறந்தாலும் சோம்பல் குடி கொண்டால் அது அழிந்து விடும்.இது தேவை.

602-மடியை மடியா ஒழுகல் குடியைக்
   குடியாக வேண்டு பவர்.

குடிப்பெருமை உயரவேண்டுமானால்,சோம்பலை ஒழித்து ஊக்கத்துடன் உழைக்க வேண்டும்.இது தேவை .

603-மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
   குடிமடியுந் தன்னினு முந்து.

சோம்பல் குடிகொண்ட ஒருவனது குடும்பம்,அவனுக்கு முன்பே அழிந்து விடும்.இது தேவை.

604-குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
   மாண்ட உஞற்றி லவர்க்கு.

சோம்பல் பெருகிவிட்ட ஒருவனது வாழ்வில் குற்றம் பெருகி குடும்பம் அழியும் .இது தேவை .

605-நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
   கெடுநீரார் காமக் கலன்.

நாளை பார்க்கலாம்,மறதி,சோம்பல்,ஆழ்ந்த தூக்கம் இவை நான்கும்,கெடுகின்ற  ஒருவர் பயணிக்கும் படகுகளாகும்.இது தேவை.

 606-படியுடையார் கற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
      மாண்பயன் எய்தல் அரிது.

என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் சோம்பல் கொண்டிருந்தால் பெருமை கொள்வது அரிது,இது தேவை
                               
607-இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
   மாண்ட உஞற்றி லவர்.

முயற்சி யற்றவர்கள், சோம்பல் உள்ளவர்கள் இழி நிலைக்கு ஆளாவார்கள்.இது தேவை.

608-மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
   கடிமை புகுத்தி விடும்.

பெருமை மிக்க குடியில் பிறந்தாலும் அவரிடம் சோம்பல் குடி கொண்டால் அதுவே பகைவரிடத்தில் அடிமையாக்கிவிடும்.இது தேவை.

609-குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
   மடியாண்மை மாற்றக் கெடும்.

தன்னிடம் உள்ள சோம்பல்  நீங்கினால், குலப்பெருமையும்,ஆண்மையும் தானே வந்து சேரும்.இது தேவை .

610-மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
   தாஅய தெல்லாம் ஒருங்கு.

சோர்விலா மன்னன் சென்ற விடமெல்லாம் வெற்றியே.இது தேவை.

மடியின்மைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை .

No comments: