Monday, April 23, 2018

77-படைமாட்சி


                          77-படைமாட்சி

761-உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
   வெறுக்கையுள் எல்லாம் தலை.

யாருக்கும் அஞ்சா நால்வகைப்படைகளுடன் உள்ள வெற்றிதரும் படையே ஒரு அரசருக்கு அமைந்துள்ள செல்வங்களில் எல்லாம் தலை(சிறந்தது)இது தேவை

762-உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்து
   தொல்படைக் கல்லால் அரிது.

போரில் சேதமுற்று அழிவு வந்தாலும் நெஞ்சுறுதி கொண்ட பழம்பெருமை கொண்ட நெஞ்சுறுதி வேறெந்த படைக்கும் வராது.இது தேவை.

763-ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.

எத்தனை எலிகள் எதிர்த்து நின்றாலும் ஒரு நாகத்தின் முன் அவையெல்லாம் காணாமல் போய்விடும்,அது போல ஒரு வீரன் முன் வீணர்கள் வீழ்ந்து விடுவர்.இது தேவை.

764-அழிவின்றி அரையோகா தாகி வழிவந்த
    வன்க னதுவே படை

போரில் தோல்வி காணாமலும்,பகைவரின் சதிக்கு துணை போகாமலும் தொன்று தொட்டு வருவதே வீரத்தை உடையதே படையாகும்.இது தேவை.

765-கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
   ஆற்ற லதுவே படை.

எமனே எதிர்த்து வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் நிற்கும் ஆற்றலுடையதற்கே படை என்பதாகும்.

இங்கே கூற்றுடன்று..எனும் சொல்லுக்கு எமன் அல்லது மரணம் என பொருள் கொண்டால் ,அதை எதிர்க்கும் ஆற்றல் படைக்கு வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

மரணம் மனித குலத்துக்கு வெல்ல முடியாத ,கண்ணுக்கு புலப்படாத வலிமை மிக்க இயற்கை பேரழிவு,அதாவது மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது. இந்த ஒப்புமை உடன் பாடற்றது.எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.

766-மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
   எனநான்கே ஏமம் படைக்கு.

வீரம்,மானம்,சிறந்த வழி நடத்தல்,மன்னன் நம்பிக்கைக்கு உரித்தாகுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்கு சிறப்பாகும்.இது தேவை.

767-தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
   போர்தாங்கும் தன்மை அறிந்து.

தன்னை எதிர்த்து வரும் பகைவரின் தன்மை அறிந்து அவனுடைய தூசிப் படைகளை(நால்வகைப் படைப்பிரிவுகள்) எதிர்த்து வெல்வதே படையாகும்.இது தேவை.
                              
 768-அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்.

வெற்றி கொள்ளும் ஆற்றல் இல்லை என்றாலும் ,ஒரு படை யானது அது அணிவகுத்து நிற்கும் தோரணையில் அழகு பெறும்.இது தேவை.

769-சிறுமையும் செல்லாத் துளியும் வறுமையும்
   இல்லாயின் வெல்லும் படை.

படை சிறுத்தும்,தலைவனின் வெறுப்பும்,வறுமையும் இல்லா நிலை உள்ள படையே வெற்றி பெறும்.இது தேவை.

770-நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
   தலைமக்கள் இல்வழி இல்.

மாபெரும் வீரர்கள் நிலைத்திருந்தாலும்,தலைமை ஏற்க தலைவன் இல்லை எனில் அந்த படை போரில் நிலைத்து நிற்காது.இது தேவை.

படைமாட்சிஅதிகாரத்தின் 765 ம் குறளைத் தவிர ஏனைய 9 குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தது.

                   




No comments: