Tuesday, April 17, 2018

57-வெருவந்த செய்யாமை


                  57-வெருவந்த செய்யாமை

561-தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
   ஒத்தாங் கொறுப்பது வேந்து.

நாட்டில் நடைபெறும் குற்றங்களை எல்லாம் நடுநிலையோடு ஆய்ந்து ,அக்குற்றங்கள் மீண்டும் நிகழா வண்ணம் தண்டனை வழங்குவதே வேந்தரின் கடமை.இது தேவை .

562-கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.

குற்றம் செய்வோரை தண்டிக்கும் போது கடுமை காட்டுவது போல் தோன்றினாலும் மென்மையுடன் தண்டித்தால் ஆட்சியாளர் செல்வாக்கு ஓங்கும்.இது தேவை

563-வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
   ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிமக்களுக்கு  அச்ச உணர்வை ஏற்படுத்தும் அரசு விரைவில் அழியும்.இது தேவை

564-இறைகடியன் என்றுரைக்கும்இன்னாச்சொல்வேந்தன்
   உறைகடுகி ஒல்லைக் கெடும்.

கடுஞ் சொல் உரைக்கும் கொடுங்கோலன் என குடிமக்கள் அஞ்சுவர் எனில்,அரசனின் புகழ் மங்கும்.இது தேவை.

565-அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து.

சுடு முகத்துடன் விளங்குபவனிடத்தில் குவிந்துள்ள செல்வம்,பேயிடம் உள்ள செல்வத்தை ஒத்ததாகும்.இது மெய்ப்பியல் தன்மைக்கு அப்பாற்பட்டது,பேய் என்பதும்,கடவுள் என்பதும் மெய்ப்பிக்க முடியாத அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.எனவே இது மாணவர்கள் கற்க தகுதி யற்றது.

566-கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
   நீடின்றி ஆங்கே கெடும்.

கடுஞ்சொல் கொண்டவன் கண்ணிருந்தும் இல்லாதவனைப்போல் கருணையற்றவனிடம் உள்ள செல்வமும் யாருக்கும் பயன் தரா.இது தேவை.

567-கடுமொழியுங் கையிகந்த தண்டமும்  வேந்தன்
   அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுஞ் சொல்லும் முறையற்ற தண்டனையும் அரசின் வலிமையை மெலியச் செய்யும் அரம் போன்ற கருவிக்கு சமம்.இது தேவை.

568-இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
   சீறிற் சிறுகுந் திரு.

தன் இன மக்களிடம் சினம் கொள்ளும் வேந்தனின் செல்வம் தானாக அழியும்.இது தேவை.

569-செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.

போர் வருமுன்னே தன்னை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கா மன்னவன் போர் வந்துவிட்டால் அஞ்சியே கெடுவான்.இது தேவை.
                                
 570-கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை.

படிப்பறிவற்றவர்கள்  நோயாளிகளுக்கு சமம்,அவர்களை அரசன் துணைக்கு வைத்துக்கொள்வது பூமிக்கு பாரம்.இதிலிருந்து என்ன தெரிகிறது நாடு முன்னேற்றத்திற்கு கல்விதான் முக்கியம் என தெரிகிறதா? இது தேவை .
வெருவந்த செய்யாமைஅதிகாரத்தின் 565-ம் குறள் மட்டும் மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது.மற்ற 9குறட்களும் பயனுள்ளவை.
              *********************************************************************************************
யாரிந்த ராமானுஜர்? தாத்தாச்சாரி வாயிலாக.......
திருப்பெரும்பூதூரில் தோன்றியவர்,ராஜேந்திர சோழனுக்கு தளபதியான நாதமுனியின் வழித்தோன்றலான ஆளவந்தார் பெண் வயிற்று பேரன்,மண்டைஓடு வழிபாட்டுக்கு எதிரானவர்,நாத்திகர்ளை நசுக்க வந்தவர்,ஜைனம் எனும் யானையை அடக்க வந்தவர்.சிறுவயதிலேயே,வேத உபநிஷத்துக்களை கரைத்துக்குடித்தவர்,தாய் மொழியான தமிழில் எந்த கிரந்தத்தையும் இயற்ற வில்லை.உலகில் எதுவுமே மாயை அல்ல ,கடவுள் ஜீவிக்கறார்,அவர் பரலோகத்தில் உள்ளார் எனும் மெய்பியல் தன்மையற்ற வாதமான விசிஷ்டாத்தவைதம் எனும் அருவ தத்தவத்தை பறைசாற்றினார்
                   .************************

No comments: